'சென்னை எக்ஸ்பிரஸ், சிங்கம் ரிட்டர்ன்ஸ்' படங்களின்
இயக்குனரான ரோகித் ஷெட்டி, விரைவில் வெளிவர இருக்கும் அவருடைய 'சிங்கம் ரிட்டர்ன்ஸ்' படத்தின்
பிரமோஷனுக்காக சில நாட்களுக்கு முன் ஐதராபாத் சென்றிருக்கிறார். அப்போது
பத்திரிகையாளர்களைச் சந்தித்த ரோகித், “நான் தெலுங்குப் படங்களை கண்டிப்பாக
இயக்க மாட்டேன், ஆனால் தெலுங்குப் படங்களின் கதை எனக்கு மிகவும் பிடிக்கும். எனக்கு
ரஜினிகாந்த், அமிதாப்பச்சன்,
அஜித் ஆகியோரை இயக்க வேண்டும் என்று
ஆசை,” என்றும் சொல்லியிருக்கிறார்.
ஐதராபாத்தில் 'லிங்கா' படத்தின்
படப்பிடிப்பு நடைபெறுவதைத் தெரிந்து கொண்ட ரோகித் ஷெட்டி, ரஜினிகாந்தை
சந்திக்கச் சென்றிருக்கிறார். அப்போது ரோகித் வருவதைத் தெரிந்து கொண்ட ரஜினிகாந்த், அவருடைய இருக்கையை
விட்டு எழுந்து வந்து ரோகித்தை வரவேற்றிருக்கிறார். அது மட்டுமல்ல, தான் ரோகித்
ஷெட்டியின் ரசிகன் என்றும் கூறி ரோகித்தை மகிழ்ச்சியடைய வைத்திருக்கிறார்.
ரஜினியின் இந்த அணுகுமுறையால் ரோகித் மிகவும் உணர்ச்சிவசப்பட்டிருக்கிறார்.
அது பற்றி அவர் கூறுகையில், “இதுதான் ரஜினி சார், என எனக்குள்ளேயே
சொல்லிக் கொண்டிருக்கிறேன். என்னைப் பொறுத்தவரையில் இந்த உலகத்திலேயே
ரஜினிகாந்த்தான் மிகப் பெரிய ஸ்டார். அவர் மிகவும் அடக்கமாக இருக்கிறார். என்னைத்
தேடி நடந்து வந்து என்னைப் பாராட்டிய அவருடைய குணம் பெரிதும் கவர்ந்து விட்டது.
அவருடன் அரை மணி நேரம் பேசிக் கொண்டிருந்தேன். அந்த சந்திப்பு மிகவும் அற்புதமான
அனுபவம்,” என மெய் சிலிர்க்கிறார் ரோகித் ஷெட்டி.
No comments:
Post a Comment