வேர்ட்
தொகுப்பில் ஆல்ட் கீயுடன் இணைந்த சில ஷார்ட் கட் கீகள்
Alt O, B: தேர்ந்தெடுக்கப்பட்ட
பாராக்களில் அட்டவணை செல்களில் மற்றும் படங்களில், பார்டர்களையும், ஷேடிங்குகளையும் மாற்ற இந்த கீகளைப் பயன்படுத்தலாம்.
Alt O, E: ஆவணத்தில்
தேர்ந்தெடுக்கப்பட்ட சொற்களில் சிறிய எழுத்தைப் பெரிய எழுத் தாகவும் பெரிய
எழுத்துக்களை சிறிய எழுத்துக்களாகவும் மாற்ற இந்த கீகள் பயன்படுகின்றன.
Alt O, C: காலம், செக்ஷன் என்றழைக்கப்படுகிற பிரிவுகளை ஏற்படுத்த இந்த கீகளை முதலில்
அழுத்தலாம். column format என்ற டயலாக் பாக்ஸ் கிடைக்கும்.
Alt O, D: ஆவணத்தில்
பத்தி ஒன்றைத் தேர்ந்தெடுத்து அதில் உள்ள முதல் எழுத்தைப் பெரிதாக, பெரிய எழுத்தாக மாற்ற இந்த கீகளைப் பயன்படுத்தலாம். ஆல்ட் ஓ மற்றும்
டி அழுத்தியவுடன் ட்ராப் கேப் என்ற சிறிய விண்டோ கிடைக்கும். இதில் முதல் எழுத்து
எப்படி அமைய வேண்டும் என மூன்று ஆப்ஷன்கள் கிடைக்கும். நாம் தேர்ந்தெடுக் கப்படும்
வகையில் பத்தியின் முதல் எழுத்து மாற்றப்படும்.