நோக்கியா எக்ஸ்ஸ்மார்ட் போன்

இந்தியாவில் ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன்களுக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வருவதால், நோக்கியா தன் எக்ஸ் வரிசையில் பல ஸ்மார்ட் போன்களை இந்தியாவில்
விற்பனைக்குக் கொண்டு வருகிறது. 




இந்த போன்களை, இந்திய வாடிக்கையாளர்களுக்குக் கட்டுப்படியாகும் விலையில் தர முடியும் என நோக்கியா கருதுகிறது. எனவே தான், தன் முதல் எக்ஸ் வரிசை போன், நோக்கியா எக்ஸ் வெளியானதைத் தொடர்ந்து, தன் அடுத்த X+ மற்றும் XL மாடல் போன்களையும் இந்தியாவிற்குக் கொண்டு வருவதில் ஆர்வம் காட்டுகிறது. வரும் ஜூன் மாதத்திற்குள், இவை இந்திய மொபைல் சந்தையில் இடம் பெறும் வாய்ப்புகள் உள்ளன.
இன்னும் இவற்றிற்கான விலை விபரங்கள் தெரிவிக்கப்படவில்லை. தற்போதைய ஈரோ விலை அடிப்படையில் கணக்கிட்டால், இவை முறையே ரூ.8,420 மற்றும் ரூ.9,270 என அமையலாம். ஆனால், நோக்கியா எக்ஸ் மொபைல் போனின் விலை ரூ.8,599 ஆக இருப்பதால், மேலே குறிப்பிட்ட விலைக்கு இங்கு அறிமுகமாவது சந்தேகமாக உள்ளது. நிச்சயம் சற்று கூடுதலாகவே விலை நிர்ணயம் செய்யப்படலாம். இந்த இரண்டு போன்களின் அம்சங்களை இங்கு காணலாம்.

நோக்கியா எக்ஸ் ப்ளஸ்:
  • 4 அங்குல WVGA IPS LCD டச் ஸ்கிரீன்,
  • நோக்கியா எக்ஸ் சாப்ட்வேர்,
  • 1 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் டூயல் கோர் ப்ராசசர்,
  • 3 எம்.பி. கேமரா,
  • 768 எம்.பி. ராம் மெமரி,
  • 32 ஜி.பி. வரை அதிகப்படுத்தக் கூடிய 4 ஜி.பி. ஸ்டோரேஜ் மெமரி மற்றும் 1,500 mAh திறன் கொண்ட பேட்டரி.
  • நோக்கியா எக்ஸ்.எல்: 5 அங்குல WVGA IPS LCD டச் ஸ்கிரீன்,
  • நோக்கியா எக்ஸ் சாப்ட்வேர், 1 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் டூயல் கோர் ப்ராசசர்,
  • 5 எம்.பி. கேமரா,
  • 2 எம்.பி. வெப் கேமரா,
  • 768 எம்.பி. ராம் மெமரி,
  • 32 ஜி.பி. வரை அதிகப்படுத்தக் கூடிய 4 ஜி.பி. ஸ்டோரேஜ் மெமரி மற்றும் 2,000 mAh திறன் கொண்ட பேட்டரி