ஸ்பைஸ் ஸ்டெல்லார் 440 ஸ்மார்ட் போன் ஒருபார்வை

ஸ்பைஸ் நிறுவனத்தின் புதிய தொடக்க நிலை ஸ்மார்ட்போன் ஸ்டெல்லார் 440 (Stellar 440) அண்மையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. இதனை Saholic வர்த்தக இணைய தளம் மூலம் வாங்கிக் கொள்ளலாம். இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பு அம்சம் இதில் தொலைக் காட்சி நிகழ்ச்சிகளைப் பார்க்கும் வகையில் வழங்கப்பட்டுள்ள தொழில் நுட்பமே. முன்புறமாக இரண்டு ஸ்பீக்கர்கள் தரப்பட்டிருப்பது இன்னொரு சிறப்பு. இதன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஆண்ட்ராய்ட் 4.4 கிட்கேட். இதில் 4 அங்குல WVGA ஸ்கிரீன் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் டூயல் கோர் ப்ராசசர் தரப்படுகிறது. 3ஜி செயல்பாடு, இரண்டு சிம் இயக்கம், எல்.இ.டி.ப்ளாஷ் இணைந்த 3.2 மெகா பிக்ஸெல் திறனுடன் கூடிய கேமரா, 1.3 மெகா பிக்ஸெல் திறனுடன் இணைந்த முன்புறக் கேமரா ஆகியவை தரப்பட்டுள்ளன. 



இதன் பரிமாணம் 127.6×63.8×11.5 மிமீ. நெட்வொர்க் இணைப்பிற்கு 3ஜி, வை பி, புளுடூத், ஜி.பி.எஸ். ஆகிய தொழில் நுட்பங்கள் இயங்குகின்றன. எப்.எம். ரேடியோ, 3.5. மிமீ ஆடியோ ஜாக் தரப்பட்டுள்ளன. இதில் தரப்பட்டுள்ள பேட்டரி 1,400 mAh திறன் கொண்டதாகும். Spice Stellar 440 மொபைல் ஸ்மார்ட் போன் கிரே கலரில் கிடைக்கிறது. ரூ.5,249 அதிக பட்ச் விலையிடப்பட்டுள்ள இந்த போன், ரூ. 4,199க்குக் கிடைக்கிறது.


No comments:

Post a Comment