நான் படம் பார்க்கச் சென்றால் அப்படிப்பட்ட படங்களுக்குத்தான் செல்வேன் - ஹன்சிகா.
தமிழ்த் திரையுலகில் தற்போதைய முன்னணி நடிகை யார் என்று கேட்டால் கண்ணை மூடிக் கொண்டு ஹன்சிகாதான் என்று சொல்ல 
வேண்டும். அந்த அளவிற்கு அதிகப்படியான படங்களில் நடித்து வருகிறார். இவர் நாயகியாக நடித்துள்ள 'மீகாமன், ஆம்பள' ஆகிய படங்கள் விரைவில் வெளியாக உள்ளன. இந்த படங்களையடுத்து விஜய்யுடன் பெயரிடப்படாத ஒரு படத்திலும், ஜெயம் ரவியுடன் 'ரோமியோ ஜுலியட்', சிம்புவுடன் 'வாலு, வேட்டை மன்னன்' ஆகிய படங்களிலும், புதுமுகம் ஒருவருடன் 'உயிரே உயிரே' ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார்.

எத்தனை படத்தில் நடித்தாலும் குடும்பத்துடன் அனைவரும் பார்த்து ரசிக்கும்படியான படத்தில் மட்டுமே நடிப்பேன் என ஹன்சிகா முடிவெடுத்துள்ளாராம். ஓரளவிற்கு கிளாமராக மட்டுமே நடிப்பது என்றும் எந்த விதமான ஆபாசமான காட்சிகளிலும் நடிக்க மாட்டேன் என ஹன்சிகா சொல்கிறாராம். குடும்பத்துடன் பார்க்கும் படங்களைத்தான் அனைவரும் விரும்பிப் பார்க்கிறார்கள். ஏன், நான் கூட படம் பார்க்கச் சென்றால் அப்படிப்பட்ட படங்களுக்குத்தான் செல்வேன் என்கிறாராம் ஹன்சிகா.

இதுவரையிலும் ஹன்சிகா நடித்துள்ள படங்கள் குடும்பக் கதையாகவும் இருக்கின்றன. ஆனால், சில படங்களில் கிளாமர் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும். அவரே கிளாமராக நடித்து விட்டு, குடும்பத்துடன் பார்க்கும் படங்கள் என்று சொன்னால் எப்படி எனக் கேள்வி கேட்கிறார்கள் சிலர். ஹன்சிகாவின் டிக்ஷனரியில் கிளாமர் என்றால் அளவுகோல் எவ்வளவு என்று அவரே சொல்வாரா....?


No comments:

Post a Comment