சிம்புதேவன்-விஜய் படத்தின் தலைப்பு ஜனவரியில் வெளியீடு

சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்திற்கு மாரீசன்’, ‘கருடா’, ‘போர்வால்போன்ற தலைப்புகளை வைக்கப்போவதாக இணையதளங்களில் செய்திகள் பரவலாக பரவி வருகின்றன.
இதுகுறித்து சிம்புதேவன் கூறும்போது, விஜய்யின் 58-வது படத்திற்கான தலைப்பு இன்னும் உறுதிச் செய்யப்படவில்லை. இணையதளங்களில் படத்தின் தலைப்பு குறித்து வரும் செய்திகள் அனைத்தும் வதந்தியே. தற்போது இப்படத்திற்கான தலைப்பு குறித்து விவாதித்து வருகிறோம். உறுதியான தலைப்பை வரும் ஜனவரியில் வெளியிடுவோம் என்று குறிப்பிட்டுள்ளார்.
இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன், ஹன்சிகா மொத்வானி ஆகியோர் நடித்து வருகின்றனர். கிச்சா சுதீப், ஸ்ரீதேவி கபூர் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
தேவிஸ்ரீ பிரசாத் இசையமைப்பில் உருவாகும் இப்படத்தை பி.டி.செல்வகுமார் மற்றும் தமீன்ஸ் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர். கோடை விடுமுறையில் படத்தை வெளியிட முடிவு செய்துள்ளனர்.


No comments:

Post a Comment