உத்தம வில்லன் பாடல்கள் வெளியீட்டு விழா மலேசியா, சிங்கப்பூரில்கடைசி நேரத்தில் ஏதாவது பரபரப்பை உருவாக்கி படத்தை பிரமாண்டமாக பிரமாதப்படுத்திவிடுவது கமலின் வழக்கம். இந்தமுறை உத்தம வில்லனின் பாடல்களை மலேசியா மற்றும் சிங்கப்பூரில் வெளியிட திட்டமிட்டுள்ளார்.

கமல் இரு வேடங்களில் நடித்துள்ள இந்தப் படத்தின் சவுண்ட் டிஸைனிங் வேலைகள் தற்போது ஹாலிவுட்டில் நடந்து வருகின்றன. அதற்காக கமல் லாஸ் ஏஞ்சல்ஸ் சென்றுள்ளார். படத்தில் ஸீஜி வேலைகளும் பிரதானமாக வருகின்றன. இரு நிறுவனங்கள் ஸீஜிக்கான பொறுப்பை ஏற்றுள்ளன. 

ஜனவரி மாதம் படத்தின் பாடல்களை வெளியிட திட்டமிட்டுள்ளனர். ஃபெப்ரவரியில் படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


No comments:

Post a Comment