‘நாய்கள் ஜாக்கிரதை’ இரண்டாம் பாகம் வருகிறதுசிபிராஜ், அருந்ததி நடித்து சக்தி சௌந்தர் ராஜன் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த படம், நாய்கள் ஜாக்கிரதை. 
லிங்காபடம் வெளியான நிலையில் கூட இன்னமும் ஒரு சில தியேட்டர்களில் இந்தப் படம் ஓடிக்கொண்டிருக்கிறது. இது படத்தின் நாயகன் சிபிராஜுக்கு உற்சாகத்தை தந்துள்ளது. அதுமட்டுமின்றி பெரிய நிறுவனங்கள், இயக்குனர்களிடம் இருந்து நடிக்கவும் அழைப்பு வருகிறதாம்.
மேலும் நாயகள் ஜாக்கிரதை படத்தின் ரீ-மேக் உரிமை கேட்டும் பலர் சிபிராஜை தொடர்பு கொண்டு வருகிறார்களாம். இதனால் நாய்கள் ஜாக்கிரதைபடத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க திட்டமிட்டுள்ளார் சிபிராஜ். அடுத்த ஆண்டு இறுதியில் இதன் வேலைகள் ஆரம்பமாகுமாம்.
தான் நடித்த படங்கள் அடுத்தடுத்து தோல்வியை தழுவி வந்ததால் ஒரு பெரிய பிரேக்கிற்காக காத்திருந்தார் சிபிராஜ். இந்நிலையில் அவர் எதிர்பார்த்த மாதிரி நாய்கள் ஜாக்கிரதை படம் திருப்புமுனையை தந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment