பாபி சிம்ஹா நடிக்கும் புதிய படம் "சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது"ஜிகர்தண்டாபடத்திற்குப் பிறகு பாபி சிம்ஹாவிற்கு பட வாய்ப்புகள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இப்படத்தில் சிம்ஹாவின் கதாபாத்திரம் அனைவராலும் பேசப்பட்டதால் புதிய வாய்ப்புகள் குவிய ஆரம்பித்துள்ளன.
ஜிகர்தண்டா படத்தை இயக்கிய கார்த்திக் சுபாராஜ் இயக்கத்தில் உருவாகும் இறவி’, மனோபாலா தயாரிப்பில் பாம்பு சட்டைமற்றும் உறுமீன்ஆகிய படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.
தற்போது சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறதுஎன்னும் புதிய படத்திலும் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.
கல்யாணத்திற்காக பெண் தேடி அலையும் மூன்று இளைஞர்கள், அவர்கள் சந்திக்கும் சூழ்நிலைகளால் அவர்கள் எடுக்கும் முடிவுகளைத்தான் படத்தின் கதையாக உருவாக்கியிருக்கிறார்கள்.
இதில் கதாநாயகியாக சரண்யா நடிக்கிறார். மேலும் பாபி சிம்ஹாவுடன், லிங்கா மற்றும் பிரபஞ்செயன் என்னும் புதுமுக நடிகர்கள் இணைந்து நடிக்கிறார்கள்.
இப்படத்தை மருதுபாண்டியன் இயக்குகிறார். இவர் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்படத்தை இயக்கிய பாலாஜி தரணிதரனின் நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment