விஜய்யின் 58-வது படம் - புதிய செய்திகர்நாடகாவில் மைசூர் அரண்மனையை அடுத்து இரண்டாவது பெரிய அரண்மனையாக கருதப்படுவது லலிதா மஹால் அரண்மனை. சாமுண்டி ஹில்ஸ் பகுதியில் அமைந்துள்ள இந்த அரண்மனையில் பல்வேறு சினிமா படப்பிடிப்புகள் நடைபெற்றுள்ளது.
சமீபத்தில் ரஜினி நடிப்பில் வெளிவந்த லிங்காபடத்தின் சில காட்சிகள்கூட இந்த அரண்மனையில் படமாக்கப்பட்டது.
இந்நிலையில், தற்போது சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் புதிய படத்தின் படப்பிடிப்பையும் இந்த அரண்மனையில் படமாக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கெனவே, விஜய் நடிப்பில் வெளிவந்த வில்லுபடத்தின் சில காட்சிகள் இங்கு படமாக்கப்பட்டது.
தற்போது, இரண்டாவது முறையாக விஜய் படத்தின் படப்பிடிப்புகள் இங்கு நடைபெற இருக்கின்றன. இதற்கான வேலைகளில் படக்குழுவினர் தீவிரமாக இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
சரித்திர பின்னணியில் உருவாகும் இப்படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கப்படவில்லை. விஜய்க்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன், ஹன்சிகா மொத்வானி ஆகியோர் நடிக்கின்றனர். மேலும், ஸ்ரீதேவி, சுதீப் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.
இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் பிரம்மாண்ட அரண்மனை போன்று செட் அமைத்து படமாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இப்படத்தை சிபு தமீன் உடன் இணைந்து பி.டி.செல்வகுமார் பிரம்மாண்டமாக தயாரிக்கிறார்.


No comments:

Post a Comment