கணிதன் கைகொடுக்குமா ? வாரிசு நடிகரின் எதிர்ப்பார்ப்பு


பரதேசிக்குப்பிறகு அதர்வா நடித்து வெளியான இரும்புக்குதிரை தோல்வியடைந்து அவருக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்து விட்டது. அதனால் தற்போது தடகள வீரராக நடித்து வரும் ஈட்டி மற்றும் கணிதன் படங்களை பெரிய அளவில் எதிர்பார்க்கிறார் அதர்வா. இதற்கிடையே வாகை சூடவா சற்குணம் இயக்கும் படத்திலும் நடிக்கிறார்.

இதில் கணிதன் படத்தை இயக்கும் சந்தோஷ் படத்தை கொண்டு செல்லும்விதம் வித்தியாசமாக உள்ளதாம். அதனால் காட்சிகளில் அவசரகதியில் நடிக்காமல், ஒவ்வொரு நாளுக்கான காட்சிகளையும் முந்தின நாளே டைரக்டரிடம் கேட்டு தெரிந்து கொண்டு அடுத்த நாள் அதை முழுசாக உள்வாங்கி நடித்து வருகிறாராம் அதர்வா.
மேலும், இந்த படத்தில் பிரம்மாண்டமான ஆக்சன் காட்சிகளும் உள்ளதாம். இதற்கு முன்பு நான் நடித்த படங்களில் எடுக்காத ரிஸ்க்கை இந்த படத்தில் எடுத்திருக்கிறேன். முக்கியமாக, எந்த சண்டை காட்சியிலும் டூப் யூஸ் பண்ணவில்லை. நானே நடித்திருக்கிறேன் என்று கூறும் அதர்வா, ஆக்சன் பிரியர்களுக்கு இந்த படம் பெரிய விருந்தாக இருக்கும் என்கிறார்.


No comments:

Post a Comment