குரலை கணீர் கணீர் வெளிப்படுத்தும் சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன் நடித்த படங்களில் எதிர்நீச்சல், மான்கராத்தே படங்கள் அவருக்கு எப்படி முக்கியமானதாக அமைந்ததோ, அதேபோல் அவரை அடுத்த தளத்துக்கு கொண்டு செல்லும் ஒரு படமாக அமைந்திருக்கிறது காக்கி சட்டை. இந்த படத்திற்கு முதலில் டாணா என்று பெயர் வைத்தவர்கள், இப்போது காக்கி சட்டை என்ற தலைப்பை உறுதிபடுத்தியுள்ளனர்.

இந்த படத்தில் சிவகார்த்திகேயன் க்ரைம் போலீஸ் ஆபீசராக நடித்திருக்கிறார். போலீஸ் வேடத்தில் நடிக்கும் முதல் படம் என்பதால், தன் மீது விழுந்திருக்கும் காமெடி இமேஜ் இந்த படத்தில் பிரதிபலித்து விடக்கூடாது என்று ஒவ்வொரு காட்சியிலும் காக்கி சட்டையின் கம்பீரத்தை வெளிப்படுத்தும் வகையில் நடித்திருக்கிறாராம்.
அதோடு, அதற்கேற்ற கம்பீரமான குரலை வெளிப்படுத்தினால் தான் அந்த கதாபாத்திரம் முழுமை பெறும் என்பதால், தனது குரலை இன்னும் உச்சஸ்தாயலில் நிறுத்தி கடந்த சில தினங்களாக அப்படத்துக்காக டப்பிங் பேசிக் கொண்டிருக்கிறார் சிவகார்த்திகேயன். வழக்கமாக தனக்கான டப்பிங்கை இரண்டு மூன்று நாட்களிலேயே முடித்து விடும் சிவகார்த்திகேயன். இந்த படத்திற்காக குரலை கணீர் கணீர் வெளிப்படுத்தி பேசுவதால், கூடுதலாக டயம் எடுத்து பேசி வருகிறாராம். ஆக, கெட்டப் மட்டுமின்றி, குரலிலும் இந்த காக்கிசட்டையில் கனமான சிவகார்த்திகேயனை பார்க்க முடியும் என்கிறார்கள்.


No comments:

Post a Comment