அடுத்து விஜய் படம் தான் அட்லிஎந்திரன், நண்பன் படங்களில் ஷங்கரிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றியவர் அட்லி. ஆர்யா, நயன்தாரா, ஜெய் நடித்த ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான அட்லி, அப்படத்தின் வெற்றியின் மூலம் மொத்த தமிழ் சினிமாத்துறையினரையும், ரசிகர்களையும் ஒரு சேர தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தார்


தமிழ்சினிமாவில் புலிகளை நடிக்க வைத்தவரான புலிக்குட்டி கோவிந்தனின் பேத்தியும், சிங்கம் படத்தில் அனுஷ்காவின் தங்கையாக நடித்தவருமான கிருஷ்ண ப்ரியாவுடன் அட்லிக்கு காதல் மலர்ந்தது. தங்களது காதலை முறைப்படி பெற்றோரிடம் தெரிவித்து, சம்மதமும் வாங்கினார்கள். இந்த காதல் ஜோடிக்கு செப்டம்பர் 7ஆம் தேதி திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. இந்நிலையில் வருகிற 9ஆம் தேதி அட்லி - ப்ரியாவின் திருமணம் நடைபெறவிருக்கிறது. அதனைத் தொடர்ந்து அன்று மாலை சென்னை ஹயாத் ஹோட்டலில் திருமண வரவேற்பும் நடைபெறவிருக்கிறது. மாரீசன் படத்தை அடுத்து விஜய் நடிக்க உள்ள அடுத்த படத்தை இயக்க ஒப்பந்தமாகி உள்ள அட்லி, திருமணம் முடிந்த கையோடு வெளிநாட்டுக்கு தேனிலவுக்கு செல்கிறாராம். தேனிலவு முடிந்து திரும்பியதும் பட வேலையில் களமிறங்கிவிருக்கிறாராம் அட்லி.

No comments:

Post a Comment