மீண்டும் மனைவி இயக்கத்தில் கணவர்

சூப்பர் ஸ்டாரின் மகளும், நடிகர் தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா, 2012 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளிவந்த 3 படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். 3 படத்தின் வெற்றியை அடுத்து தமிழ் சினிமா பெண் இயக்குனர்களின் பட்டியலில் இடம்பிடித்த ஐஸ்வர்யா, தற்போது கௌதம் கார்த்திக், ப்ரியா ஆனந்த் நடிப்பில் வை ராஜா வை படத்தை இயக்கி வருகிறார்.
ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. என்னதான் 3 என்ற வெற்றிப்படத்தை இயக்கியவரின் படம் என்றாலும், வை ராஜா வை படத்துக்கு விநியோகஸ்தர்கள் மத்தியில் எதிர்பார்த்த வரவேற்பு இல்லை. மொத்த ஏரியாவையும் அவுட்ரைட்டுக்கு விற்றாலும் படத்தின் பட்ஜெட்டில் பாதி தொகையைக்கூட நெருங்க முடியவில்லையாம். எனவே படத்தின் பிசினஸ் வேல்யூவை அதிகரிக்கும் திட்டத்தில், கடைசி நேரத்தில், இப்படத்தின் முக்கிய காட்சி ஒன்றில் நடிக்க நடிகர் தனுஷை கௌரவ வேடத்தில் நடிக்கும்படி கேட்டுள்ளனர்.. அதற்கு தனுஷ் ஓகே சொல்லியதோடு உடனே நடிக்கவும் ஒப்புக் கொண்டிருக்கிறாராம்.
இதுகுறித்த ட்வீட் செய்துள்ள ஐஸ்வர்யா, வை ராஜா வை படத்தில் கேமியோ ரோலில் நடிக்க ஒப்புக் கொண்ட தனுஷிற்கு நன்றிகள். அவரை இயக்க சந்தோஷமாக தயாராகிக் கொண்டிருக்கிறேன் என ட்வீட் செய்திருக்கிறார். வை ராஜா வை படத்தில் தற்போது தனுஷும் இணைந்திருப்பதால் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு கூடும் என நம்புகிறது தயாரிப்பு நிறுவனம்.


No comments:

Post a Comment