மலையாள நாயகி மியா ஜார்ஜ்தாய்மொழியான மலையாளத்தில் 10க்கும் மேற்பட்டு படங்களில் நடித்து விட்டு அமரகாவியம் படத்தில் தமிழுக்கு வந்தவர் மியா ஜார்ஜ். அந்த 
படத்தில் ஆர்யாவின் தம்பி சத்யா நாயகனாக நடித்திருந்தார். அதில் மாணவியாக நடித்த மியா, காதல் காட்சிகளில் அற்புதமான உணர்வுகளை வெளிப்படுத்தி படம் பார்த்தவர்களின் மனதில் இடம்பிடித்தார்.

ஆனபோதும், செண்டிமென்ட் நிறைந்த உலகம் என்பதால் அந்த படத்தின் தோல்வி காரணமாக உடனடியாக மியாவுக்கு தமிழில் படங்கள் புக்காகவில்லை. அதனால் ஏற்கனவே மலையாளததில் கைவசம் படங்கள் இருந்ததால் புதிய படங்களுக்காக கோடம்பாக்கத்தில் டேரா போடாமல் கேரளாவுக்கு திரும்பிவிட்டார்.


இந்த நிலையில், விஷ்ணு நடிக்கும் இன்று நேற்று நாளை என்ற படத்திற்கு இப்போது கமிட்டாகியிருக்கிறார் மியா. இதனால் அவருக்கு தமிழ் சினிமா மீது புதிய நம்பிக்கை பிறந்திருக்கிறது. முக்கியமாக, தமிழில் முன்னணியில் இருந்த அமலாபால் திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விட்டார். லட்சுமிமேனன் தற்போது பின்தங்கியிருக்கிறார். அதனால் இந்த இடைவெளியை பயன்படுத்தி தமிழில் நிலையான இடத்தை பிடித்து விட வேண்டும் என்று நினைக்கும் மியா ஜார்ஜ், மலையாளத்தில் தான் நடித்து வரும் 6பி பாரடைஸ் என்ற படத்திற்கு கொடுத்திருந்த கால்சீட்டில் சில மாற்றங்கள் செய்து இந்த படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறாராம்.

No comments:

Post a Comment