ஹெடர், புட்டரில் கிராபிக்ஸ்













ஹெடர், புட்டரில் கிராபிக்ஸ் : எக்ஸெல் ஒர்க்ஷீட் ஒன்றின் ஹெடர் மற்றும் புட்டரை (header and footer) வடிவமைக்கையில், எக்ஸெல் பலவகை சிறப்பு 
கூறுகளை அதில் அமைத்திட வழி தருகிறது. படங்களைக் கூட இவற்றில் இணைக்கலாம்.

1.
முதலில் Insert டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும்.

2.
இதில் Header & Footer என்ற டூலில் கிளிக் செய்திடவும். எக்ஸெல் ரிப்பனில் Design என்ற டேப்பினைக் காட்டுகிறது.

3.
இங்கு, ஹெடர் அல்லது புட்டர், இவற்றில் எதில் நீங்கள் சிறப்பு கூறுகளை அமைக்க விரும்புகிறீர்கள் என்பதனைப் பொறுத்துத் தேர்ந்தெடுக்கவும். 

4.
உங்களுடைய கிராபிக் படம் எந்த இடத்தில் அமைக்கப்பட வேண்டும் என விரும்புகிறீர்களோ, அதற்கேற்ப, (left, center, or right) அப்பகுதியினைத் தேர்ந்தெடுக்கவும். 

5.
தொடர்ந்து Header & Filter Elements குரூப்பில் உள்ள Picture டூலில் கிளிக் செய்திடவும். இப்போது எக்ஸெல், Insert Picture டயலாக் பாக்ஸைக் காட்டும்.

6.
அடுத்து, டயலாக் பாக்ஸில் உள்ள கண்ட்ரோல் ஸ்விட்ச்களைப் பயன்படுத்தி, நீங்கள் அமைக்க விரும்பும் கிராபிக் பைலைத் தேர்ந்தெடுக்கவும். 

7.
தொடர்ந்து Insert என்பதில் கிளிக் செய்திடவும். எக்ஸெல், தேர்ந்தெடுத்த கிராபிக் படத்தினை ஏற்கனவே தேர்ந்தெடுத்த இடத்தில் அமைக்கிறது. 

8.
இனி, ஹெடர் அல்லது புட்டரில், தேவையான திருத்தங்களை மேற்கொள்ளவும்.

9.
ஹெடர் அல்லது புட்டரை விட்டு வெளியேறி, வெளியே கிளிக் செய்திடவும்.

இனி, ஹெடர் அல்லது புட்டரில், நீங்கள் அமைத்த கிராபிக் படம் நிலையாக இருக்கும். தேவை இல்லை எனில், இதே போல செயல்பட்டு, டயலாக் பாக்ஸில் தேவையான கண்ட்ரோல் தேர்ந்தெடுத்து நீக்கலாம்.டேப்பின் பரிமாணத்தை மாற்ற எக்ஸெல் ஒர்க் ஷீட்டின் டேப்கள் அனைத்தும் சிறியதாகவே தரப்பட்டுள்ளன. மாறா நிலையில் தரப்படும் இவற்றின் பரிமாணத்தை நாம் மாற்றலாம். 

நீங்கள் பயன்படுத்துவது விண்டோஸ் 7 எனில், கீழ்க்கண்டபடி செயல்படவும்.

1. Start
மெனு அல்லது தேடல் கட்டத்தில் இருந்து Control Panel திறக்கவும். 

2.
அடுத்து Appearance & Personalization என்பதில் கிளிக் செய்திடவும். 

3. Personalization
பிரிவில் Change Window Glass Color என்பதில் கிளிக் செய்திடவும். 

4.
அடுத்து Advanced Appearance Settings என்பதில் கிளிக் செய்திடவும். 

5.
அடுத்து Item என்ற ட்ராப் டவுண் பாக்ஸில், Scrollbar என்பதைத் தேர்ந்தெடுக்கவும். அடுத்து, நீங்கள் விரும்பும் அளவில் டேப் அமைய, அதற்கான அளவுகளைத் தேர்ந்தெடுத்து அமைக்கவும். பெரிய அளவில் என்றால், டேப்களும் பெரியதாக அமையும். பின்னர் Apply மற்றும் OK கிளிக் செய்து வெளியேறவும்.

இப்போது எக்ஸெல் ஒர்க் ஷீட் டேப்களின் அளவு நீங்கள் செட் செய்தபடி அமையும். இதில் என்ன பிரச்னை என்றால், உங்கள் ஆபீஸ் தொகுப்பில் உள்ள புரோகிராம்களில் தரப்பட்டுள்ள ஸ்குரோல் பார்களின் அளவும் மாற்றப்பட்டிருக்கும். சற்று பெரியதாக உள்ள ஸ்குரோல்
பாரினை நீங்கள் பயன்படுத்தப் பழக வேண்டியதிருக்கும்.


No comments:

Post a Comment