4 மொழிகளில் உருவாகும் ரீமேக் படம்நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவர் தியாகராஜன். இவரது மகனான பிரஷாந்த் முன்னணி நடிகராக வலம் வந்தார். இடையில் சிறு இடைவெளிக்கு பிறகு இப்போது சாகசம் என்ற பிரமாண்ட படத்தில் சாகசம் பண்ணிக் கொண்டு இருக்கிறார். இப்படம் விரைவில் வெளிவர இருக்கிறது. இந்நிலையில், இந்தியில் கங்கனா ரணாவத் நடித்து சூப்பர் ஹிட்டான ''குயின்'' படத்தின் ரீ-மேக் உரிமையை வாங்கி வைத்திருக்கும் தியாகராஜன், இப்போது பாலிவுட்டில் சூப்பர் ஹிட்டான மற்றொரு படமான ''ஸ்பெஷல்-26'' படத்தின் ரீ-மேக் உரிமையையும் வாங்கியுள்ளார்.


அக்ஷ்ய் குமார், அனுபம் கெர், மனோஜ் பாஜ்பாய் ஆகியோர் நடிப்பில் வெளிவந்த இப்படம் சூப்பர் ஹிட்டானது. பணத்தை கொள்ளையடித்து வைத்துள்ள அரசியல்வாதிகள் மற்றும் தொழிலதிபர்களின் வீடுகளில் சிபிஐ., அல்லது வருமான வரி அதிகாரிகள் போன்று வேடமிட்டு அவர்களின் பணத்தை கொள்ளையடிப்பது போன்று இப்படத்தின் கதை அமைக்கப்பட்டு இருந்தது. இப்படத்தை ரீ-மேக் செய்ய பலத்த போட்டி நடந்து வந்த நிலையில், அதன் ரீ-மேக் செய்யும் உரிமையை தியாகராஜன் வாங்கியிருக்கிறார். அதோடு மட்டுமின்றி இப்படத்தை அவரே இயக்கவும் உள்ளார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளிலும் ரீ-மேக் செய்ய இருக்கிறார்.

No comments:

Post a Comment