லிங்கா ரிலீஸ் தேதி அறிவிப்பு

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள லிங்கா படம் தொடங்கப்பட்டபோதும் ரஜினியின் பிறந்த நாளான டிசம்பர் 12-ந்தேதி வெளியிடுவதாக அறிவித்தனர்.
ஆனால், மைசூரில் லிங்கா படப்பிடிப்பு தொடங்கப்பட்டபோது அங்கு படப்பிடிப்பு நடத்த எதிர்ப்புகள் எழுந்ததால். முதல்கட்ட படப்பிடிப்பை சில நாட்களோடு நிறுத்தி விட்டு சென்னை திரும்பினர். அதனால் திட்டமிட்டபடி படப்பிடிப்பை நடத்த முடியாமல் தடங்கல்கள் ஏற்பட்டது. அதையடுத்து ஐதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டிக்கு வந்து படப்பிடிப்பை தொடர்ந்தனர்.
இருப்பினும், கே.எஸ்.ரவிக்குமாரைப் பொறுத்தவரை ஸ்பாட்டில் நிமிடங்களைகூட வேஸ்ட் பண்ணமாட்டார். அடுத்து அடுத்து என்று வேகமாக சென்று கொண்டேயிருக்கக்கூடியவர் என்பதால், மைசூர், ஐதராபாத், ஷிமோகா, துபாய் என்று தற்போது அனைத்துகட்ட படப்பிடிப்பும் நடத்தப்பட்டு, நேற்றோடு பூணிக்காயும் உடைக்கப்பட்டு விட்டதாம்.
அதனால் இதுவரை டிசம்பரில் லிங்கா வெளியாவது கடினம் பொங்கலுக்குத்தான் வர வாய்ப்பிருக்கிறது என்று கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது இறுதிகட்ட பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளதால்,. இம்மாதம் ஆடியோவை வெளியிட்டு ஏற்கனவே திட்டமிட்டபடி, டிசம்பர் 12ல் படத்தை வெளியிட்டு விடுவார்கள் என்று கூறப்படுகிறது.
ஆக, டிசம்பர் 12-ந்தேதி ரஜினியின் பிறந்த நாள் மற்றும் லிங்கா ரிலீஸ் என அவரது ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் காத்திருக்கிறது.


No comments:

Post a Comment