காதல் கதை தேடும் சூர்யா

கார்த்தி நடித்த மெட்ராஸ் படத்தின் வெற்றியை கொண்டாடி வரும் இயக்குனர் ரஞ்சித், தனது அடுத்த படத்தின் வேலைகளை துவக்க தயாராகி விட்டாராம்.
தம்பி கார்த்தி நடித்த மெட்ராஸ் படத்தை பார்த்து விட்டு, அந்த படம் தன்னை வெகுவாக கவர்ந்து விட்டதாக கூறிய சூர்யா, ரஞ்சித்துடன் ஒரு படம் பண்ண வேண்டும் என முடிவு செய்து, அவருடன் ஒப்பந்தமும் போட்டு விட்டாராம். இந்த படத்தை தானே இயக்கவும் திட்டமிட்டுள்ளாராம் சூர்யா.
தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் தான் நடித்து வரும் மாஸ் படத்திற்கு பிறகு விக்ரம் குமாரின் படத்திலும், பின்னர் ஹரி இயக்கத்தில் ஒரு படத்திலும் நடித்த பிறகு ரஞ்சித் இயக்கத்தில் சூர்யா நடிக்க உள்ளாராம். இந்த படத்தின் கதை பற்றி கேட்டதற்கு, இப்போதே அதை பற்றிய பேச்சு எதற்கு என்றும், படம் மிகவும் ஆரம்ப நிலையிலேயே இருப்பதாகவும் கூறி விட்டனராம் படக்குழுவினர்.
இருப்பினும் ரஞ்சித் இயக்கத்தில் சூர்யா நடிக்க உள்ள படம் ஒரு அழகான காதல் கதையாம். இதில் சில்லுனு ஒரு காதல் படத்தில் பார்த்தது போன்று ரொமான்டிக் ஹீரோ அவதாரத்திற்கு திரும்புகிறார் சூர்யா. முந்தைய இரண்டு படங்களைப் போலவே ரஞ்சித்தின் இந்த படத்திற்கும் சந்தோஷ் நாராயணன் தான் இசையமைக்க உள்ளாராம். மற்ற நடிகர், நடிகைகள் குறித்து இன்னும் முடிவாகவில்லையாம்.


No comments:

Post a Comment