நவம்பர் 17ல் மீண்டும் சூட்டிங்கிற்கு வருகிறார் ஜோதிகாநடிகர் சூர்யாவை திருமணம் செய்து கொண்ட பிறகு படங்களில் நடிக்காமல் இருந்த ஜோதிகா, 7 ஆண்டுகளுக்கு பின், ஹவ் ஓல்ட் ஆர் யூ என்ற மலையாள படத்தின் ரீமேக் மூலம் மீண்டும் ரீஎன்ட்ரி கொடுக்கிறார். இந்த படத்தின் சூட்டிங் நவம்பர் 17ம் தேதி துவங்குகிறது. இந்த படத்தில் ஜோதிகாவின் கணவராக நடிகர் ரகுமான் நடிக்கிறாராம்.

டைரக்டர் ரோஷன் ஆன்ட்ரிவ் இந்த படத்தை இயக்குகிறார். தற்போது அவர் இயக்கும் மலையாள பட வேலைகளில் பிஸியாக இருப்பதால் தான் ஹவ் ஓல்ட் ஆர் யூ படத்தின் ரீமே பணிகளை நவம்பரில் துவங்க உள்ளார்களாம். தமிழில் ரீமேக் செய்யப்பட உள்ள ஹவ் ஓல்ட் ஆர் யூ படம், துவக்கத்தில் சென்னையிலும் பிறகு டில்லி மற்றும் ராஜஸ்தானிலும் படமாக்கப்பட உள்ளதாம்.


தமிழ் மற்றும் மலையாளத்தில் குணசித்திர வேடங்களில் நடித்து வரும் ரகுமான், நீண்ட இடைவெளிக்கு பிறகு ஹீரோயினின் கணவராக இந்த படத்தில் நடிக்க உள்ளாராம்.


No comments:

Post a Comment