ஆக்சன் சீன்களில் எதிரிகளை சுளுக்கெடுத்திருக்கிறார் -கார்த்திகாகோ, அனனக்கொடி படங்களில் நடித்த கார்த்திகா, இப்போது எஸ்.பி.ஜனநாதன் இயக்கும் புறம்போக்கு படத்தில் ஆர்யா-விஜயசேதுபதி-ஷாம் ஆகியோருடன் இணைந்து நடிக்கிறார். ஆனால் யாருக்கும் அவர் ஜோடி கிடையாது. அவரும் இன்னொரு ஹீரோ போன்ற வேடத்தில்தான் நடிக்கிறார். அதனால் ரோப் கட்டிக்கொண்டு இவரும் ஆக்சன் சீன்களில் எதிரிகளை சுளுக்கெடுத்திருக்கிறாராம்.
மேலும், ராஜஸ்தானில் நடந்த படப்பிடிப்பில் ஒரே நாளில் ஒட்டகத்தின் மீது அமர்ந்து பயிற்சி எடுத்தவர், ஒட்டக ரேஸ் காட்சியிலும் நடித்திருக்கிறாராம். அதோடு ஒரு காட்சியில் பயங்கர வேகத்தில கார் ஓட்டியிருக்கிறாராம் கார்த்திகா. அந்த அளவுக்கு அவருக்கு ஒரு டெரரான வேடமாம். தன்னை ப்ரூப் பண்ணுவதற்கு கிடைத்திருக்கும் ஒரு அரிய வாய்ப்பு என்பதால் எந்த காட்சியிலும் என்னால் முடியாது எனறு சொல்லாமல், அடுத்த நிமிடமே அதை செய்து காட்டியிருக்கிறாராம் கார்த்திகா.
ஆனால் இந்த அளவுக்கு அவர் எந்த காட்சியை கொடுத்தாலும் நடிப்பதற்கு காரணம், அன்னக்கொடி படத்தில் நடித்தபோது பாரதிராஜா கற்றுக்கொடுத்த நடிப்புதானாம். நடிப்பைப்பற்றி பெரிதாக எதுவும் தெரியாமல் சினிமாவிற்குள் வந்த நான், கோ படத்தில் டைரக்டர் சொன்னதை அப்படியே வெளிப்படுத்தினேன் ஆனால், அன்னக்கொடியில் நடித்தபோதுதான் நடிப்பு என்றால் என்ன? என்பதை பாரதிராஜா மூலம் தெளிவாக தெரிந்து கொண்டேன். அதனால் அந்த படம் வெற்றி பெறாதபோதும் நான் நடிப்பு பயிற்சி பெற ஒரு நல்ல பள்ளிக்கூடமாக அமைந்தது என்கிறார் கார்த்திகா.


No comments:

Post a Comment