சீயான் விக்ரம் பற்றி சிவகார்த்திகேயன்தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் ஹீரோக்களில் விஜயசேதுபதி, சிவகார்த்திகேயன் இருவரும் முக்கியமானவர்கள். இதில் சிவகார்த்திகேயன் இதுவரை காதல், காமெடி என்று கலகலப்பான கதைகளாக தேர்ந்தெடுத்து நடித்து வந்தவர், தற்போது ஆக்சன் பக்கம் திரும்பியிருக்கிறார். ஏற்கனவே மான்கராத்தே படத்தில் ஆக்சனுக்கு பிள்ளையார் சுழி போட்ட சிவகார்த்திகேயன் தற்போது நடித்து வரும் காக்கி சட்டை படத்தில் ஆக்சனை அதிகப்படுத்தியிருக்கிறார்.

அதோடு, போலீஸ் கெட்டப்புக்காக தனது உடல் எடையைகூட சற்று அதிகப்படுத்தி நடித்து வருகிறார். ஆனால் இப்படி அவர் நடித்து வரும் வேளையில், விக்ரம் நடிப்பில் வெளியாகியுள்ள ஐ படத்தின் டீசர் மற்றும் போட்டோக்களைப் பார்த்து மற்ற ஹீரோக்களைப் போன்று சிவகார்த்திகேயனும் மிரண்டு போயிருக்கிறாராம்.
இதுபற்றி அவர் விடுத்துள்ள ஒரு செய்தியில், காக்கி சட்டை படத்துக்காக நானும் உடல் எடையை சில மாதங்களாக ஜிம்னாஸ்டிக் சென்று மாற்றியமைத்தேன். அதற்கே அதிக கஷ்டப்பட்டதாக நினைத்தேன். ஆனால், ஐ படத்துக்காக விக்ரம் சார் எடுத்துள்ள ரிஸ்க்கை பார்க்கையில் நானெல்லாம் ஒன்றுமே செய்யவில்லை என்று தோன்றுகிறது. அந்த படத்தில் அவரது ஒவ்வொரு கெட்டப்பையும பார்க்கையில் அதற்காக அவர் எவ்வளவு உழைத்திருப்பார் என்பதை நினைக்கையில் ஒரு நடிகன் என்ற முறையில் அவர் மீதான மதிப்பும் மரியாதையும் அதிகமாகிறது என்று தனது மனநிலையை வெளிப்படுத்தியிருக்கிறார் சிவகார்த்திகேயன்.


No comments:

Post a Comment