கத்தி சினிமா விமர்சனம்


















கிராம பகுதியை அண்டிய இடத்தில் ஒரு பெரிய குளிர்பான தொழிற்சாலையை அமைப்பதற்க்கு அரசு அனுமதி கொடுக்கின்றது! அந்த குளிர்பான தொழிற்சாலையால் கிராமத்து தண்ணீர் உறுஞ்சப்படுகின்றது இதனால் மக்கள் பல இன்னல்களுக்கு ஆளாகின்றார்கள்! இதன் போது மக்களுக்காக விஜய் போராடுகின்றார் அந்த வெளிநாட்டு நிறுவனத்தை எதிர்கின்றார்! மக்களுக்காக போராடுகின்ற விஜய் திடீரென காணாமல் போய் விடுகின்றார்! படத்தின் உச்சக்கட்ட எதிர்பார்ப்பே இங்கிருந்துதான் ஆரம்பிக்கின்ரது! குறிப்பாக வில்லத்தனமான விஜய் இன் அறிமுக காட்சி சும்மா தெறிக்க விட்டிருக்காங்க திரையரங்குகளை! அனிருத்தின் பின்னணி இசை தக்க சமயத்தில் அஸ்திரங்களாக பாய்ந்துள்ளது! என்ன சொல்லி என்ன பயம் கதையில் உழுந்து வடையின் ஓட்டை போல் பெரிய ஓட்டை படத்துக்கு சொதப்பல் என்றால் அதுதான்! மான்கராத்தேகதை முருகதாஸின் தான் என்றால் ஜோசித்து பாருங்கள் மக்களே கத்திகதை எப்படி இருக்கும் என்று!

ஒரு விஜய் காணாமல் போன தருணத்தில் சமந்தா, காதல் என்று ஜாலியாக இருந்த இன்னொரு விஜய் மக்களுக்கு அறிமுகம் ஆகின்றார். மக்கள் இவரை தங்களுக்காக போராடிய விஜய் என நினைத்து குறைபாட்டை எடுத்து சொல்கின்றார்கள், இந்த விஜய் மக்களில் பிரச்சனையை கேட்டு மக்களுக்காக தானும் களம் இறங்குகின்றார். ரெண்டு விஜய்க்கும் பெரிய வித்தியாசங்கள் என்று ஒன்றும் இல்லை, ‘அழகிய தமிழ்மகன்இரட்டைக்கதாப்பாத்திரத்தை நினைத்துக்கொள்ளவும்! காணாது போன விஜய்க்கு என்னா ஆகிற்று என்பதுதான் படத்தின் பெரிய ஒரு திருப்புமுனை, இந்த காட்சிகளின் ஒழுங்கமைப்பு, காட்சி எடுக்கப்பட்ட விதமும் பாராட்டியே ஆக வேண்டும்! கணாமல் போன விஜய் மற்றும் மக்களுக்காக போராடிக்கொண்டு இருக்கும் விஜய் இருவரும் சந்திக்கும் காட்சி இன்னொரு ஜில்லாதான். படத்தில் இருவரும் மக்களுக்காக போராரும் கட்டங்கள் காட்சியமைப்பும் சலிக்காமல் படத்தினை நகர்திய முருகதாஸின் இயக்கத்துக்கு ஒரு பெரிய பாராட்டு! படத்தில் சமந்தா பற்றி சொல்லியே ஆக வேண்டும் படத்தில் ஒரு கலர் இருக்கு என்றால் அது சமந்தாதான் காரணம்! சில சில காட்சிகளில் செம அழகாக காட்டி இருக்காரு இயக்குநர். படத்துக்கு சமந்தாதான் பலம் என்று சொல்ல முடியாது, கவர்ச்சி, ஹீரோவுடன் தேவையான காட்சிகள் என அளவாக சந்தாவை பயன்படுத்தியுள்ளார் முருகதாஸ்! உப்புக்கு சப்பாக வந்து போனாலும் சில சில காட்சிகள் படம் முடிந்த பின்னும் நினைப்பில் இருக்குமாறு செய்து விட்டார் சமந்தா! படத்தில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது இரண்டு விஜயைக்கும், படத்தின் திரைக்கதைக்கும் தான்!


படத்தின் ஓட்டத்திற்கு சதீஸின் நகைச்சுவை எடுபடவில்லை! ஆனால் நகைச்சுவை காட்சி கட்டாயம் என்ற இடங்களிற்கு மாத்திரம் சதீஸ் வந்து போவது பெரிதும் பின்னடைவாக இருக்கவில்லை. இதற்க்கு முதலில் தரணி இயக்கிய தூள்படத்தின் காட்சிகள், கதை நினைப்பு வருவது எனக்கு மட்டும்தானா? என பல காட்சிகளில் நினைத்ததுண்டு. தமிழ் சினிமாவிற்கு மிகவும் பழக்கப்பட்ட கதைக்களம் அவ்வாறு இருக்கும் போது இந்த கதையை விறுவிறுப்பாக ஒழுங்கமைத்தமை பாராட்டத்தக்க விடயமே! சினிமாவில் மக்களுக்காக போராடுவதில் எம்.ஜி.ஆர் இற்கு பிறகு விஜய்தான்! இருந்தாலும் படத்தில் இந்த அளவுக்கு சண்டைக்காட்சிகளை வைத்திருக்க கூடாது எல்லா சண்டை காட்சிகளும் மிரட்டுவதாக உள்ளது, பயங்கரமாக உள்ளது, ஜீரணிக்க முடியாது உள்ளது. படத்துக்கு இன்னொரு பக்க பலம் பிரதான வில்லன், மற்றும் இசையமைப்பாளர் அனிருத். வில்லனில் நடிப்பு மற்றும் வார்த்தை பிரயோக அசைவுகள் பிரமாதம், சாவால் விடும் சந்தர்பங்களிலும், விஜய்யுடன் பேசும், மோதும் காட்சிகளும் ரசிகர்களில் இரசனைக்கு விருந்துதான்! வில்லனின் டயலாக் டெலிவரிகள் செம சில சில இடங்களில் விஜயை முந்தி விடுகின்றார். படத்தில் சில தொய்வுகள் விஜயின் டயலாக்டெலிவரியும் ஒரு காரணம்!


இரண்டு விஜயையும் திரையில் காட்டுவதில் அக்கறை காட்டியதை போல இன்னும் கொஞ்சம் அதிகமாக வில்லனுக்கு காட்சிகளை கொடுத்திருந்தால் படம் இன்னும் விறு விறுப்பாக இருந்திருக்கும்! படத்தின் அனைத்து பாடல்களும் வெற்றி பெற்ற நிலையில் பாடல்களுக்கான விழியம் எவ்வாறு இருக்கும் என்பது பலரின் எதிர்பார்ப்பாக இருந்தது! குறிப்பாக ‘Selfy புள்ள... பாடல் ஆத்தி... பாடல் மற்றும் பக்கம் வந்து.... பாடலும் கலக்கலோ கலக்கல்! நிட்சயமாக திரை அரங்குகளில் ரசிகர்களில் குத்தாட்டத்துக்கு குறைவே இருக்காது! பாடல்களை விட பின்னணி இசை கலக்கல். அனிருத் மொழியில் சொல்ல வேண்டும் என்றால் சும்மா தெறிக்க விட்டிருக்காரு! இது அனிருத்திற்கு 6வது படமாகும், 6 படங்களின் பாடல்களும் வரிசையில் வெற்றி என்பது சாதாரணமான விடயம் அல்ல! விஜய் படத்தின் பாடல்கள் வெற்றி அடைவது புதிய விடையமோ, சாதனையான விடயமோ அல்ல வழமையானதே!
இரண்டு விஜய்களும் இணைந்தார்களா? அல்லது அவர்களுக்குள் போராட்டமா? முடிவில் ஜெய்ச்சது எந்த விஜய்? மக்களில் பிரச்சனை தீர்க்கப்பட்டதா? வெளிநாட்டு நிறுவனத்திற்கு என்னவாகிற்று? என்பதை மிகவும் சுவாரசியமாக சொல்லி இருக்கின்றார்களா? என்பதுதான் கத்திபடம்! படத்தின் கிளைமேக்ஸ் காட்சி மட்டும் கொஞ்சம் கூட படத்துக்கு ஒத்து வரவில்லை! சொல்லப்போனால் சகிக்க முடியவில்லை! இது படத்தின் பெரிய பின்னடைவுக்கு காரணமாகும்! நிச்சயமாக விஜய் ரசிகர்களால் கொண்டாடப்படும் படமாக துப்பாக்கிவரிசையில் கத்தியும் இருக்கும். நல்ல சமூக நோக்கம் கருதிய படம், தற்போது மக்கள் அனுபவிக்கும் பல பிரச்சனைகளை மையமாக கொண்ட படம், அதன் சீற்றங்களை காரம் குறையாமல் சொல்லி இருக்கும் படம்

No comments:

Post a Comment