ஹீரோ ஆகிறார் காமெடியன்

தெகிடி, முண்டாசுப்பட்டி, கேரளா நாட்டிளம் பெண்களுடனே உள்பட பல படங்களில் நடித்திருப்பவர் காளி வெங்கட். ஹீரோக்களுக்கு நண்பனாக நடித்துள்ள அவர், சில படங்களில் வித்தியாசமான கேரக்டர்களிலும் நடித்திருக்கிறார். தற்போது அரை டஜன் படங்களில பிசியாக நடித்து வருகிறார். இந்த நிலையில், அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கப்படும் ஒரு படத்தில் அவர் ஹீரோவாக நடிக்கப்போகிறாராம். புதுமுக டைரக்டர் ஒருவர் இயக்கும் அந்த படம் கிராமத்து பின்னணியில் உருவாகிறதாம். ஆனால் இன்னும் படத்தின் டைட்டீல், ஹீரோயின் போன்ற விசயங்கள் முடிவாகவில்லையாம்.


இதுபற்றி காளி வெங்கட் கூறுகையில், சினிமாவில் தற்போது நான் நிறைய படங்களில் ஹீரோக்களின் ப்ரண்டாகத்தான் நடித்து வருகிறேன். ஆனால் எனக்கு சினிமாவில் நல்லதொரு கேரக்டர் ஆர்ட்டிஸ்டாக வரவேண்டும் என்பதுதான் ஆசையே. அதனால் வித்தியாசமான கேரக்டர்களாக எதிர்பார்க்கிறேன். மற்றபடி ஹீரோவாக நடிக்க வேண்டும் என்பதெல்லாம் நோக்கம் அல்ல.


ஆனால், எனக்கு பொருத்தமான ஒரு காமெடி ஸ்கிரிப்ட் வந்ததால் அந்த கதையில் ஹீரோவாக நடிக்க ஒத்துக்கொண்டேன். அப்படத்தில் பாலா சரவணன் என்பவரும் நடிக்கிறார். நாங்கள் இருவரும் அண்ணன்-தம்பியாக நடிக்கிறோம். கதைப்படி இரண்டு பேருமே ஹீரோதான் என்று சொல்லும் காளி வெங்கட், தற்போது விஜய் ஆண்டனி நடித்து வரும் இந்தியா-பாகிஸ்தான் படத்தில் அவரது நண்பராக பிசியாக நடித்துக்கொண்டிருக்கிறார்.

No comments:

Post a Comment