பிட்சா இயகுனரின் அடுத்த படம்










முதல் படத்தில் வெற்றி பெற்ற பல இயக்குநர்கள் இரண்டாவது படத்தில் தோல்வியடைந்து காணாமல் போய் இருக்கிறார்கள். சமீபத்தில் கூட அப்படி சில இயக்குநர்கள் காணாமல்போய் இருக்கிறார்கள். காதலில் சொதப்புவது எப்படி என்ற படத்தை இயக்கி வெற்றியடைந்த இயக்குநர் பாலாஜி மோகன் இரண்டாவதாக இயக்கிய வாயை மூடி பேசவும் படத்தில் தோற்றுப்போனார். 
இந்த விஷயத்தில் தப்பித்தவர் பீட்சா பட இயக்குநர் கார்த்திக் சுப்பாராஜ். குறும்பட இயக்குநராக இருந்து பீட்சா மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான கார்த்திக் சுப்பராஜ், பீட்சா தந்த தெம்பில் சித்தார்த், சிம்ஹா, லக்ஷ்மிமேனனை வைத்து ஜிகர்தண்டா படத்தை தனது இரண்டாவது படமாகக் கொடுத்தார். ஜிகர்தண்டா படம் விமர்சகர்களிடம் மட்டுமல்ல, ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்றது. 
இந்நிலையில், கார்த்திக் சுப்பராஜ் அடுத்து இயக்கப்போகும் படம் என்ன என்ற கேள்வி திரையுலகில் எழுந்துள்ளது. அதற்கான விடை தற்போது தெரிய வந்திருக்கிறது. முன்னணி நட்சத்திரங்களை வைத்து இறைவி என்ற படத்தை இயக்கப்போகிறாராம். இப்படத்திற்கான ஸ்கிரிப்ட் வொர்க்கில் இருக்கும் கார்த்திக் சுப்பாராஜ் அதை முடித்த பிறகு படத்தில் யார் யாரை நடிக்க வைக்கலாம் என்பது குறித்த தேர்வில் இறங்குவாராம். இறைவி படத்தில் கண்டிப்பாக சிம்ஹாவும், கருணாகரனும் இறைவியில் இருப்பார்கள் என்றும் கூறுகிறார்கள்.


No comments:

Post a Comment