Intex Aqua Style Smart Phone ஒரு பார்வை















இன்டெக்ஸ் நிறுவனம் Aqua Style என்ற பெயரில், ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன் ஒன்றை விற்பனைக்கு அண்மையில் அறிமுகப் 
படுத்தியுள்ளது. இதில் WVGA IPS டிஸ்பிளே காட்டும் 4 அங்குல திரை உள்ளது. 1.3 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் ப்ராசசர் தரப்பட்டுள்ளது. ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஆண்ட்ராய்ட் கிட்கேட் 4.4.2. எல்.இ.டி. ப்ளாஷ் கொண்ட 5 எம்.பி. திறன் கொண்ட கேமரா, பின்புறமாகவும், 2 மெகா பிக்ஸெல் திறன் கொண்ட கேமரா, முன்புறமாகவும் இயங்குகின்றன. இரண்டு சிம் இயக்கம், 1 ஜி.பி. ராம் நினைவகம், 4 ஜி.பி. ஸ்டோரேஜ், இதனை 32 ஜி.பி. வரை அதிகப்படுத்த மெமரி கார்ட் இணைப்பு போர்ட் ஆகியவை உள்ளன. நெட்வொர்க் இணைப்பிற்கு 3ஜி, வை- பி, புளுடூத், ஜி.பி.எஸ். ஆகியவை இயங்குகின்றன. 

எப்.எம். ரேடியோ மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் தரப்பட்டுள்ளது. இதன் பேட்டரி 1,400 mAh திறன் கொண்டது. அண்மையில் வெளியான செல்கான் மில்லினம் போனுக்குப் போட்டியாக, ஸ்மார்ட் போன் சந்தையில் இது விற்பனையாகிறது. கருப்பு மற்றும் வெள்ளை வண்ணங்களில் கிடைக்கும் இதன் அதிக பட்ச சந்தை விலை ரூ. 5,990. இதனுடன் இலவசமாக ப்ளிப் கவர் ஒன்று தரப்படுகிறது.

No comments:

Post a Comment