ஸ்ருதிஹாசன் கையில் ரோஜா டாட்டூ

 ஸ்ருதிஹாசன் கையில் ரோஜா டாட்டூ













சமீபகாலமாக நடிகர், நடிகைகள் டாட்டூ என்று சொல்லப்படும் பச்சை குத்திக்கொள்வது அதிகமாகி வருகிறது. தங்களது பெயர், காதலன் பெயர், 
வித்தியாசமான படங்கள் என நடிகர், நடிகைகள் உடம்பில் பல்வேறு இடங்களில் டாட்டூ குத்தி வருகின்றனர். அந்தவகையில் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை ஸ்ருதிஹாசன், ஏற்கனவே தனது பெயரை தமிழில் பச்சை குத்தியுள்ளார். இதுதவிர தனது உடம்பில் பல்வேறு இடங்களிலும் டாட்டூ வரைந்துள்ளார். இப்போது புதிதாக தன் கை மணிக்கட்டில் ரோஜா டாட்டூவை வரைந்துள்ளார்.

ஸ்ருதி கையில் டாட்டூ நிபுணர் வரைவது போன்றும், வரைந்த பின்னர் எடுக்கப்பட்ட டாட்டூவையும் தன் டுவிட்டரில் வெளியிட்டுள்ள ஸ்ருதி, இது எனது புதிய டாட்டூ, புதிய துவக்கம், புதுவிதமான மகிழ்ச்சி, வலியில்லாமல் எதுவும் கிடைக்காது என்றும் கூறியுள்ளார்.


ஸ்ருதியின், ரோஜா டாட்டூ கிட்டத்தட்ட ஓராண்டுக்கு முன்னர் வரையப்பட்டது என்றும், மூன்று கட்டமாக டாட்டூ நிபுணர்களை வைத்து ஸ்ருதி இந்த ரோஜாவிற்கு இறுதி வடிவம் கொடுத்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.

No comments:

Post a Comment