எப்படியும் ஒரு ஹீரோ










அஞ்சான் படத்தைப் பற்றிய புதிய செய்தி ஒன்று இணைய உலகில் வலம் வந்து கொண்டிருக்கிறது. அதாவது அஞ்சான் படத்தில் சூர்யாவைவிட வித்யுத்துக்கு அதிக முக்கியத்துவம் இருப்பதாக எண்ணி அவரது காட்சிகளை குறைக்க எண்ணியுள்ளனராம். இந்த செய்தி உண்மையோ பொய்யோ.. இதற்கு மாறான மனோபாவம் கொண்ட நடிகராக இருக்கிறார் சித்தார்த்.

சமீபத்தில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ஜிகர்தண்டா படத்திலும் ஹீரோ சித்தார்த்தைவிட, வில்லன் வேடத்தில் நடித்திருந்த பாபி சிம்ஹாவுக்கே அதிக பெயர் கிடைத்தது. சிம்ஹாவுக்கு இப்படி பெயர் கிடைக்கும் என்பதை ஜிகர்தண்டா கதையைக் கேட்கும்போதே ஃபீல் பண்ணினாராம் சித்தார்த். தற்போது சித்தார்த் நடித்து வரும் காவியத்தலைவன் படத்தில் அவருடன் பிரித்விராஜும் இணைந்து நடித்திருக்கிறார். 1930களில் நடப்பதுபோல் உருவாக்கப்பட்டுள்ள இந்த கதைக்களத்தில் கூத்துக்கலையின் பெருமையும், மேடை நாடகக் கலைஞர்களின் வாழ்க்கை முறையையும் படமாக்கியிருக்கிறாராம் இயக்குனர் வசந்தபாலன். இப்படத்தில் இவர்கள் சித்தார்த், பிரித்விராஜ் இருவருக்குமே சவாலான சமமான வேடங்கள். என்றாலும், தான் ஏற்று நடித்திருக்கும் வேடத்தில் வேறு யாரும் நடிக்க முடியாத அளவிற்கு சிறப்பாக நடித்துள்ளாராம் பிரித்விராஜ். படப்பிடிப்பின்போதே இதை நேரில் கண்ட சித்தார்த், காவியத்தலைவன் படம் வெளிவந்த பிறகு தன்னைவிட பிரித்விராஜுக்கே அதிக பெயர் கிடைக்கும் என்று இப்போதே சொல்லத் தொடங்கிவிட்டார்.


No comments:

Post a Comment