விஜய் அரசியலுக்கு வர வேண்டும் - சீமான்

எம்.ஜி.ஆரின் அரசியல் பிரவேசத்திற்கு பிறகு சினிமாவில் பிரபலமான அனைத்து நடிகர்களுக்குமே அரசியல் கட்சி தொடங்க வேண்டும், ஆட்சியை பிடிக்க வேண்டும் என்கிற நாற்காலி கனவு வந்து கொண்டிருக்கிறது. அதன் காரணமாகத் தான் விஜயகாந்த், சரத்குமார் ஆகியோர் கட்சி தொடங்கி முழுநேர அரசியல்வாதியாகியிருக்கிறார்கள்.


இவர்களைத் தொடர்ந்து விஜய்க்கும் எதிர்காலத்தில் அரசியலுக்கு வரவேண்டும் என்ற ஆசை உள்ளது. அதனால் தான், தனது ரசிகர் மன்றங்களை விஜய் மக்கள் இயக்கமாக மாற்றினார். அதோடு, அவ்வப்போது ஏழை எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கி வருகிறார். மேலும், ஒரு சட்டமன்ற தேர்தலில் அதிமுகவிற்கும் விஜய்யின் மக்கள் இயக்கம் ஆதரவு அளித்தது. ஆனபோதும் இன்னும் விஜய் அரசியலில் குதிக்கவில்லை.

இந்த நிலையில், விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என்று நாம் தமிழர் கட்சித்தலைவர் சீமான் வரவேற்றுள்ளார். இதுபற்றி அவர் கூறும்போது, விஜய் தமிழர்கள் மீது அதிக பாசம் கொண்டவர். தமிழர்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் முதல் ஆளாக குரல் கொடுக்கிறார். அதனால் எதிர்காலத்தில் விஜய் கண்டிப்பாக அரசியலுக்கு வர வேண்டும் என்று கூறியுள்ளார்.


No comments:

Post a Comment