சூர்யாவுக்கு ஜோடி கரீனா கபூர்

லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா-சமந்தா நடித்து வரும் படம் அஞ்சான்’. இப்படத்தின் படப்பிடிப்பு மும்பையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில்
ஏற்கெனவே பாலிவுட் நடிகை சித்ரங்கதா சிங் ஒரு பாடலுக்கு கலக்கல் நடனமாடியுள்ளார்.

இந்நிலையில், இப்படத்தில் மேலும் ஒரு பாலிவுட் நடிகை நடிக்கவிருக்கிறாராம். அவர் வேறு யாருமல்ல, கடந்த 2012-ஆம் ஆண்டு பாலிவுட் நடிகர் சயீப் அலிகானை திருமணம் செய்துகொண்ட நடிகை கரினா கபூர்தான் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் இவர் நடிக்கப் போகிறாராம்.
சமீபகாலமாக பாலிவுட் நடிகைகள் தமிழ் படங்களில் நடிப்பது என்பது பரவலாகி வருகிறது. கோச்சடையான்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே நடித்துள்ளார். அவரைத் தொடர்ந்து கரீனா கபூரும் தமிழில் உருவாகும் அஞ்சான்படத்தில் நடிக்கவிருப்பது, பிற பாலிவுட் நடிகைகள் தமிழ் படங்களில் நடிக்க ஒரு வாய்ப்பாக இருக்கும் கோலிவுட் வட்டாரத்தில் நம்பப்படுகிறது.
அஞ்சான்படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். விறுவிறுப்பாக உருவாகி வரும் இப்படத்தில் இரண்டு பாலிவுட் நடிகைகள் இடம்பெறுவது படத்திற்கு கூடுதல் பலமாக இருக்கும் என படக்குழுவினர் கருதுகின்றனர்.