கார்த்தியின் அடுத்த படம் - "எண்ணி 7 நாள்"

கார்த்தி தற்போது அட்டக்கதி இயக்குனர் ரஞ்சித் இயக்கத்தில் "காளி" படத்தில் நடித்து வருகிறார்.அது முடியும் நிலையில் உள்ளது. இந்த நிலையில் அவரின் அடுத்த படத்தை பற்றிய அறிவிப்பு  வெளியாகி உள்ளது.
இவரின் அடுத்த படத்தை இயக்குபவர் லிங்குசாமி,படத்திற்கு "எண்ணி 7 நாள்"
என்று பெயர்வைக்கப்பட்டுள்ளது.இவர்கள் கூட்டணியில் முன்பு "பையா" வெற்றிப்படமாக அமைந்தது.

படத்தில் இடம் பெறும் நடிகர்,நடிகைகள் மற்றும் படத்தில் பணியாற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.