லெனோவா நிறுவனம் ராக்ஸ்டார் ஏ 319 (RocStar A319) என்ற பெயரில்
தன்னுடைய புதிய ஸ்மார்ட் போன் மாடலை அண்மையில் ரூ. 6,499 என்ற
விலையில், விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் தரப்பட்டுள்ள Dolby Digital Plus தொழில் நுட்பம், இசைக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது. இதன் திரை 4 அங்குல அகலத்தில் WVGA டிஸ்பிளே தன்மையுடன் உள்ளது.
இதன் டூயல் கோர் ப்ராசசர் 1.3 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்குகிறது. இதன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஆண்ட்ராய்ட் 4.4 கிட்கேட். பின்புறமாக எல்.இ.டி. ப்ளாஷ் இணைந்த 5 மெகாபிக்ஸெல் திறன் கொண்ட கேமரா உள்ளது. முன்புறமாக, 2 எம்.பி. திறன் கொண்ட கேமரா தரப்பட்டுள்ளது. 512 எம்.பி. அளவில் ராம் மெமரியும், 4 ஜி.பி. ஸ்டோரேஜ் மெமரியும் கிடைக்கிறது.

ஸ்டோரேஜ் மெமரியை மைக்ரோ எஸ்.டி. கார்ட் கொண்டு,
32 ஜி.பி. வரை அதிகப்படுத்தலாம்.
இதன் தடிமன் 10.2 மிமீ.
எடை 130 கிராம். 3.5
மிமீ ஆடியோ ஜாக் மற்றும்
எப்.எம். ரேடியோ தரப்பட்டுள்ளன. நெட்வொர்க் இணைப்பிற்கு 3ஜி, வை பி, புளுடூத் மற்றும் ஜி.பி.எஸ். ஆகிய தொழில் நுட்பங்கள் தரப்பட்டுள்ளன.
இதில் இரண்டு சிம்களை இயக்கலாம். 3ஜி செயல்திறன் இணைப்பு கிடைக்கிறது. இதன் பேட்டரி 1500
mAh திறன் கொண்டது. கருப்பு, வெள்ளை மற்றும் சிகப்பு வண்ணங்களில் இந்த மாடல், அதிக பட்ச விலை ரூ. 6,499 எனக் குறிப்பிடப்பட்டு, லெனோவாவின் பிரத்யேக விற்பனை நிலையங்களிலும், மற்ற மொபைல் போன் விற்பனை நிலையங்களிலும் கிடைக்கிறது.
No comments:
Post a Comment