அஜீத் நடித்த வாலி, விஜய் நடித்த குஷி போன்ற படங்களை இயக்கியவர் எஸ்.ஜே.சூர்யா. ஆனால்
ஒருகட்டத்தில் அவர் ஹீரோவாக உருவெடுத்தார்.நியூ, அன்பே
ஆருயிரே ஆகிய படங்கள் வெற்றியடைந்த நிலையில், கள்வனின் காதலி, வியாபாரி, நியூட்டனின் மூன்றாம்
விதி படங்களுக்கு பிறகு எஸ்.ஜே.சூர்யாவின் ஹீரோ மார்க்கெட் சரிந்தது.
இருப்பினும் தனது ஹீரோ மார்க்கெட்டை தூக்கி நிறுத்த வேண்டும் என்று இசை என்ற படத்தில் ஹீரோவாக நடிப்பதோடு, இயக்கி இசையமைத்தும் வருகிறார். இரண்டு இசையமைப்பாளர்களிடையே நிகழும் ஈகோப்போர் அடிப்படையில் இந்த படம் தயாராகிறது.
இந்த நிலையில், ஏற்கனவே நண்பன், பீட்சா -2 ஆகிய படங்களில் கெஸ்ட் ரோலில் நடித்த எஸ்.ஜே.சூர்யா இப்போது ஆர்யா-கிருஷ்ணா இணைந்து நடித்து வரும் யாட்சன் என்ற படத்திலும் கெஸ்ட் ரோலில் நடிக்கிறாராம். இப்படத்தில் நடிப்பதற்காக டைரக்டர் விஷ்ணுவர்தன் அவரை அணுகியபோது, முழுக்கதையையும் கேட்ட எஸ்.ஜே.சூர்யா, நான் நடிப்பது கெஸ்ட் ரோல் என்றாலும், கதையில் முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் வருகிறது. அதனால் இதுவும் ஒரு நல்ல கேரக்டர்தான். எனக்கு ரொம்ப திருப்தியாக உள்ளது என்று சொல்லி நடிக்க சம்மதம் சொன்னாராம். அதோடு, வித்தியாசமான கேரக்டர்கள் கிடைத்தால் தொடர்ந்து நடிக்க தான் தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார் அவர்.

No comments:
Post a Comment