சரத்குமார் நடித்து தமிழ் மற்றும்
மலையாளத்தில் தயாரிக்கப்பட்டுள்ள நீ நான் நிழல் திரைப்படம் 10-ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. நீ நான் நிழல் படத்தின்
புரொமோஷன் நிகழ்ச்சிக்கு வந்திருந்தார் சரத்குமார்... அப்போது சரத்குமாரிடம், சுப்ரீம் ஸ்டார்..புரட்சித்திலகம் என உங்களுக்கு இரண்டு
பட்டங்கள் உள்ளன. இந்த இரண்டில் உங்களுக்குப் பிடித்த பட்டம் எது? என்று கேட்கப்பட்டது. இரண்டுமே பிடிக்கும் என்று நழுவியவரிடம், ஏதாவது ஒன்றை சொல்லுங்கள் என்று கேட்கப்பட்டதும், புரட்சித்திலகம் பட்டம்தான் எனக்கும் பிடிக்கும் என்று பதில்
அளித்தார்.
புரட்சி
திலகம் என்ற பட்டம் உங்களுக்கு யார் கொடுத்தது? என்று
கேட்கப்பட்டது. ஒரு பத்திரிகை நண்பர்தான் இந்த பட்டத்தை எனக்கு சூட்டினார்.
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆருக்கு இருக்கும் பட்டத்தின் ஒரு பாதியும், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களுக்கு இருக்கும்
பட்டத்தின் ஒரு பகுதியும் இணைந்து இந்தப் பட்டம் இருப்பதால், சுப்ரீம் ஸ்டார் என்ற பட்டத்தை விட இந்தப் பட்டம் எனக்கு
ரொம்பவும் பிடிக்கும் என்றார் சரத்குமார்.
புரட்சி திலகம் பட்டத்தை சரத்குமாருக்குக் கொடுத்த பத்திரிகையாளருக்கும், அதை பயன்படுத்தி வரும் சரத்குமாருக்கும் தெரியாத விஷயம் ஒன்று உண்டு. புரட்சி திலகம் பட்டம் முதன்முதலில் கே.பாக்யராஜுக்குத்தான் கொடுக்கப்பட்டது. சில காலம் வரை புரட்சி திலகம் என்ற அந்தப் பட்டத்தை தன் பெயருக்கு முன்னால் பெருமையாக பயன்படுத்தி வந்தார் பாக்யராஜ். அதன் பிறகு அவரது மார்க்கெட் சரிந்தது, மிகுந்த சிரமத்தையும் சந்தித்தார் பாக்யராஜ். தனக்கு ராசியில்லை என்று நினைத்தோ என்னவோ அதன் பிறகு புரட்சி திலகம் என்ற பட்டத்தை பாக்யராஜ் துறந்துவிட்டார். அதைத்தான் தற்போது சரத்குமார் பயன்படுத்தி வருகிறார்.

No comments:
Post a Comment