நவம்பர் மாதம் திரைகொண்டாட்டம்





கடந்த வாரம் தீபாவளியை முன்னிட்டு புதன் கிழமை அன்று கத்தி மற்றும் பூஜை படங்கள் வெளியானது. எனவே, வெள்ளிக்கிழமை அன்று (அக்டோபர் 24) வேறு எந்த தமிழ்ப் படமும் வெளியாகவில்லை. கத்தி, பூஜை இரண்டு படங்களுக்குமே ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்திருக்கிறது. எனவே அடுத்த வெள்ளிக்கிழமையான அக்டோபர் 31ஆம் தேதியும் பெரிய படங்கள் எதுவும் வெளியாக வாய்ப்பில்லை. கல்கண்டு படம் மட்டுமே வெளியாக உள்ளது.

நவம்பர் மாதத்தின் முதல் வெள்ளிக் கிழமையான 7ஆம் தேதி ஆர். கண்ணன் இயக்கத்தில் விமல், சூரி, ப்ரியா ஆனந்த் ஆகியோர் நடித்திருக்கும் ஒரு ஊர்ல ரெண்டு ராஜா படம் ரிலீஸாகிறது. அதற்கடுத்த வெள்ளிக்கிழமையான நவம்பர் 14ஆம் தேதி வசந்தபாலனின் காவியத்தலைவன் படமும், அட்டகத்தி தினேஷ் நடித்திருக்கும் திருடன் போலீஸ் படமும் திரைக்கு வரவிருக்கிறது. இதற்கு அடுத்த வெள்ளிக்கிழமையான நவம்பர் 21 ஆம் தேதியும் பெரிய படங்கள் எதுவும் வெளியாக வாய்ப்பில்லை.

படங்களின் வெளியீட்டில் மட்டுமல்ல, இசைவெளியீட்டிலும் நவம்பர் மாதம் முக்கியத்துவம் பெறுகிறது. நவம்பர் 14ஆம் தேதி அன்று ரஜினி நடிப்பில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கும் லிங்கா படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது.
கே.வி.ஆனந்த் இயக்கத்தில் தனுஷ் நடித்து ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கும் அனேகன் படத்தின் இசை வெளியீடும் நவம்பரில்தான் நடக்கவிருக்கிறதாம்.
ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவான இன்னொரு படமான தல55 படத்தின் பாடல்களும் நவம்பரில் வெளிவர உள்ளது. இதை ஏற்கெனவே இயக்குனர் கௌதம் மேனன் உறுதி செய்திருக்கிறார்.


No comments:

Post a Comment