அட்டக்கத்தி மூலம் ரூட்டு தலையையும், மெட்ராஸ் படம் மூலமாக சுவர்
அரசியலையும் அறிமுகப்படுத்தியவர் ரஞ்சித். மெட்ராஸ் படத்தில் வட சென்னை மக்களின்
வாழ்க்கையை யதார்த்தமாக பதிவு செய்ததன் மூலம் முக்கியமான இயக்குனராக அடையாளம்
காணப்பட்டிருக்கிறார். அவரது அடுத்த படத்தை தயாரிக்க தயாரிப்பு நிறுவனங்கள்
போட்டிபோடுகின்றன. என்றாலும் மெட்ராஸ் படத்தை தயாரித்த ஸ்டூடியோ கிரீன் நிறுவனமே
அடுத்த படத்தையும் தயாரிக்கலாம் என்ற கூறப்படுகிறது.
சென்னை நகரத்து காதலையும், அரசியலையும் சொன்ன ரஞ்சித், அடுத்து இந்த இரண்டு படங்களிலிருந்து முற்றிலும் வேறுபட்டு பழங்குடி மக்களின் வாழ்க்கையை படமாக எடுக்க இருக்கிறார். இதற்காக தமிழ்நாட்டில் பழங்குடி மக்கள் வாழும் பகுதிகளுக்கு சென்று கதைக்கான நிகழ்வுகளையும், களங்களையும் ஸ்டடி செய்து வருகிறார்.
"பழங்குடி மக்களின் வாழ்க்கையை படமாக்க வேண்டும் என்பது எனது சினிமா கனவுகளில் ஒன்று. இதற்காக உழைத்து வருகிறேன். பழங்குடி மக்கள் தொடர்பான புத்தகங்களை தேடிப்பிடித்து படித்து வருகிறேன். இதற்காக நிறைய பயணம் செய்து அவர்களை பற்றி ஆய்வு செய்கிறேன். 2015ல் எனது படம் பழங்குடி மக்களை பற்றியதாக இருக்கும்" என்கிறார் ரஞ்சித்.

No comments:
Post a Comment