வேர்ட் டேப்பில் இடைவெளி அமைப்பது எப்படி?


















டெக்ஸ்ட் எல்லைக் கோடு பயன்படுத்த : வேர்ட் டாகுமெண்ட் தயாரிப்பவர்கள், Print Layout வியூவில் தங்கள் டெக்ஸ்ட்டை அமைத்தால், அதில் காட்சி 
அளிக்கும் டெக்ஸ்ட் எல்லைக் கோடு அவர்களுக்கு மிகவும் உதவியாய் இருப்பதைக் காணலாம். இவை புள்ளிகளால் ஆன கோடுகள். நீங்கள் அமைக்கும் டெக்ஸ்ட் எந்த அளவிற்குள் மட்டுமே இருக்கும் என்பதனைக் காட்டும். இந்த டெக்ஸ்ட் எல்லைக் கோடுகளின் டிஸ்பிளேயைக் கண்ட்ரோல் செய்திட கீழ்க்காணும் வழிகளைப் பின்பற்றவும்.

1. Word Options டயலாக் பாக்ஸைக் கொண்டு வரவும். வேர்ட் 2007ல், ஆபீஸ் பட்டன் கிளிக் செய்து, கீழாக உள்ள Word Options பட்டனை கிளிக் செய்திட வேண்டும். 


2. இந்த டயலாக் பாக்ஸின் இடது பக்கம் உள்ள Advanced என்பதில் கிளிக் செய்திடவும். 


3. இங்கு கிடைக்கும் ஆப்ஷன்ஸ் பட்டியலில் மவுஸை உருட்டிக் கொண்டு செல்லவும். Show Document Content என்ற பிரிவில் நிறுத்தவும். 


4. Show Text Boundaries என்ற செக் பாக்ஸில் டிக் அடையாளம் ஏற்படுத்தினால், டெக்ஸ்ட் எல்லைக் கோடு காட்டப்படும். எடுத்துவிட்டால் காட்டப்பட மாட்டாது.


தேவையானதை ஏற்படுத்திய பின்னர், ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.


நீளவரியை மடக்கி அமைக்க : 
வேர்ட் டாகுமெண்ட் ஒன்றை அமைக்கையில், பல வேளைகளில், நீளமான இணைய முகவரி ஒன்றை அமைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். இணைய முகவரிகளுக்கான லிங்க் எப்போதும் ஒரே சொல் போல நீளமாக இருக்கும். இது வலது மார்ஜின் அருகே வருகையில், அதனை ஒரு சொல்லாக எடுத்துக் கொண்டு, வேர்ட் புரோகிராம், அந்த இணைய முகவரி முழுவதையும், அடுத்த வரிக்குக் கொண்டு செல்லும். இதனை Word Wrapping எனக் கூறுகிறோம். 

இதனால் வலது மார்ஜினில் அழகின்றி ஒரு இடைவெளி ஏற்படும். இரண்டு பக்கமும் அலைன் மெண்ட் எனில், முதல் வரியில் எழுத்துக்களுக்கிடையே அழகற்ற இடைவெளி ஏற்படும். இந்த சிக்கலின்றி அமைக்க வேர்ட் ஓர் ஆப்ஷன் தந்துள்ளது. அதனைத் தேர்ந்தெடுத்து அமைத்துவிட்டால், இணைய முகவரி அல்லது மிக நீளமான சொல் தேவைப்பட்ட இடத்தில் பிரிக்கப்பட்டு அமைக்கப்படும்.


டாகுமெண்ட்டைத் திறந்து கர்சரை எந்த இடத்தில் இணைய முகவரியைப் பிரிக்க வேண்டுமோ, அந்த இடத்தில் கொண்டு செல்லவும். பொதுவாக ஸ்லாஷ் எனப்படும் சாய்வு கோட்டின் அருகே பிரிக்க விரும்புவோம். இந்த இடத்தில் கர்சரைக் கொண்டு சென்று நிறுத்தவும். அடுத்து Insert டேப்பில் கிளிக் செய்திடவும். அடுத்து Symbols குருப்பில் Symbol என்பதில் கிளிக் செய்திடவும். பின்னர், More Symbols என்பதைத் தேர்ந்தெடுத்தால், Symbols டயலாக் பாக்ஸ் திறக்கப்படும். வேர்ட் 2003ல், Insert மெனுவிலேயே Symbolபிரிவினைப் பெறலாம். இதனை அடுத்து, Special Characters என்ற டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். கிடைக்கும் விண்டோவில், No -Width Optional Break என்பதில் கிளிக் செய்திடவும். இவ்வாறு பிரித்துவிடப்பட்டுள்ளதா என்று நீங்கள் யு.ஆர்.எல். முகவரியை ஸ்கிரீனில் பார்த்து சொல்ல முடியாது. ஆனால் பிரிக்கப்பட்டிருக்கும். இதனைக் கட்டாயம் பார்க்க வேண்டும் என எண்ணினால், பாராகிராப் பிரேக் காட்டுவதற்கான ஆப்ஷனைத் தேர்ந்தெடுத்தால், அனைத்து பாரா மார்க்கர்களுடன், இந்த பிரித்த இடமும் காட்டப்படும். பிரித்த இடத்தில் சிறிய நீள் கட்டம் தெரியும். இணைய முகவரி தான் என்றில்லை. எந்த நீள சொல்லையும் இது போல பிரித்து அமைக்கலாம்.


டேப்பின் இடைவெளி அமைக்க : 
வேர்ட் ரூலர் நமக்குப் பல வழிகளில் உதவுகிறது. வழக்கமாக டேப்களை நாம் செட் செய்கிறோம். ஒவ்வொரு டேப்பிற்கும் இடையே உள்ள தூரத்தினை ரூலர் மூலம் அறிந்து கொள்கிறோம். ஆனால் ஒரு டேப் பாய்ண்ட் ரூலரின் இடது புறம் இருந்து எவ்வளவு தூரத்திலிருந்து உள்ளது என்றும் அதே போல வலது புறத்திலிருந்து எவ்வளவு தூரத்திலிருந்து உள்ளது என்றும் அறியலாம். இதற்கு ரூலரில் டேப் உள்ள இடத்தில் கர்சரைக் கொண்டு வைக்கவும். 
இப்போது இடது பக்க மவுஸ் பட்டனை அழுத்தவும். அதனை விட்டுவிடாமல் வலது பக்கம் மவுஸ் பட்டனையும் அழுத்தவும். 

இப்போது குறிப்பிட்ட டேப் இரு புறத்திலிருந்தும் எவ்வளவு தூரத்திலிருந்து உள்ளது என்று காட்டப்படும்.

No comments:

Post a Comment