ரஜினி பாராட்டிய நடிகை













லிங்கா படத்தில் ரஜினி இரண்டுவிதமான கெட்டப்புகளில் நடித்து வருகிறார். ஒன்று சுதந்திரத்துக்கு முந்தைய காலத்து ரஜினி. மற்றொன்று இப்போதைய காலகட்டத்தைச்சேர்ந்த ரஜினி என இரண்டு வேடங்களில் நடிக்கிறார். அதனால் இந்த படத்தில் சந்தானம், கருணாகரன் என்ற இரண்டு காமெடியன்கள் நடிக்கின்றனர்.


சுதந்திரத்துக்கு முந்தைய ரஜினியுடன் கருணாகரனும், இக்காலத்து ரஜினியுடன் சந்தானமும் நடிக்கின்றனர். அதேபோல், சுதந்திரத்துக்கு முந்தைய காலகட்டத்து ரஜினிக்குத்தான் அனுஷ்கா ஜோடியாக இருப்பார் என்றுதான் முன்பு கூறப்பட்டது. ஆனால், இப்போது அந்த ரஜினிக்கு ஜோடியாக சோனாக்ஷி சின்ஹா நடிப்பதாகவும், இந்த காலகட்டத்து ரஜினிக்கு ஜோடியாக அனுஷ்கா நடிப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.


அதனால், சோனாக்ஷி சின்ஹாவை விட அனுஷ்காவுக்குத்தான் படத்தில் நிறைய காட்சிகள் உள்ளதாம். ரஜினியின் போராட்டத்துக்கு அவரும் கைகொடுப்பதால் சில காட்சிகளில் வெயிட் பர்பாமென்சும் கொடுத்து நடிக்கிறாராம் அனுஷ்கா. மேலும் இதுவரை லிங்காவில் தனது கேரக்டர் பற்றி அவுட் பண்ணாமல் இருந்த அனுஷ்கா, தற்போது கிட்டத்தட்ட அப்படம் எந்த மாதிரியான கதையில் உருவாகி வருகிறது என்ற செய்திகள் வெளியாகி விட்டதால், தனது கேரக்டர் பற்றியும் சினிமா வட்டாரங்களில் சொல்லி பில்டப் கொடுத்து வருகிறார். அதோடு, சில காட்சிகளில் ரஜினி சாரே எனது நடிப்பை பாராட்டி உற்சாகப்படுத்தினார் என்றும் கூறி வருகிறார் அனுஷ்கா.

No comments:

Post a Comment