உலகின் முதல் இரண்டு ஸ்கிரீன் கொண்ட மொபைல் போன் , யோட்டா போன், இந்தியாவில் விற்பனைக்கு
வருகிறது. இதனை, ஐக்கிய அரபு
நாடுகளில், தொலை தொடர்பு, தகவல் தொழில் நுட்பம் மற்றும் நுகர்வோர் மின்னணு சாதனங்கள் விற்பனைப் பிரிவில் இயங்கி வரும், ஜம்போ எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம், இந்தியாவில் இயங்கும் ப்ளிப்கார்ட் இணைய வர்த்தக தளத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டு விற்பனை செய்கிறது. எப்போதும் இயக்கத்திலேயே இருக்கும் இந்த ஆண்ட்ராய்ட் இயக்க இரு திரை மொபைல் போனின் ஒரு பக்கத்தில், எல்.சி.டி.திரையும், இன்னொரு பக்கத்தில் எலக்ட்ரானிக் பேப்பர் டிஸ்பிளே திரையும் இயங்கும். சென்ற வாரம் முதல் ப்ளிப்கார்ட் வர்த்தக இணைய தளத்தில் இது விலையிடப்பட்டுள்ளது. இதன் விலை ரூ. 23,499.
யோட்டா மொபைல் போன், யோட்டா டிவைசஸ் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வழங்கப்படுகிறது. இந்நிறுவனம் அண்மையில் மிகப் பெரிய அளவில் பேசப்படும் எல்.டி.இ. சாதனங்களை (ஸ்மார்ட் போன், மோடம், ரெளட்டர் போன்றவை) தயாரித்து வருகிறது.

இருதிரை இருப்பதால், இதனைப் பயன்படுத்துவோர், தாங்கள் விரும்பும் தகவல்களுக்காக, போன் பயன்பாட்டினை நிறுத்த வேண்டுவதில்லை. அதே போல, போனை தகவல் பெறுவதற்காக இயக்கவும் தேவை இல்லை. இந்த தொழில்நுட்பம், மொபைல் போனின் பேட்டரி திறனையும் மிச்சப்படுத்துகிறது.
No comments:
Post a Comment