எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் ஆர்யா, விஜய் சேதுபதி, ஷாம், கார்த்திகா
நடிக்கும் புறம்போக்கு படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று
வருகிறது. படத்தின் முதல்கட்டப்படப்பிடிப்பு குலுமணாலியில் தொடங்கி, வட இந்தியாவில் பல
பகுதிகளில் நடைபெற்று முடிந்தது. பின்னர் சில வார இடைவெளிக்குப் பிறகு சென்னையில்
உள்ள பின்னி மில்லில் படப்பிடிப்பு தொடங்கியது. அங்கே பிரம்மாண்டமான ஜெயில் செட்
போடப்பட்டு கடந்த சில வாரங்களாக படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
சிறைச்சாலைக்குள் நடக்கும் முக்கிய விஷயங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட காட்சிகள்
அங்கே படமாக்கப்பட்டு வருகின்றன. அதோடு,படத்தின் க்ளைமேக்ஸ் காட்சியும் சிறை
செட்டிலேயே படமாகவிருக்கிறது..
இந்தநிலையில், புறம்போக்கு என்ற தலைப்புக்கு கடைசி நேரத்தில் பிரச்சனை வரக்கூடாது என்பதால் இப்போது புறம்போக்கு என்கிற பொதுவுடைமை என்று மாற்றியிருக்கிறார்கள். இப்படத்தில் ஆர்யாவின் கேரக்டர் பெயர் பாலு. நிஜத்தில் இந்த பாலு என்பவர் போலீஸாக இருந்து, தெலுங்கானா மக்களுக்காக குரல் கொடுத்து, சிறையில் அடைக்கப்பட்டு தூக்கிலிடப்பட்டவராம். அவர் நினைவாகத்தான் ஆர்யாவின் கதாபாத்திரத்திற்கு பாலு என்ற பெயரை வைத்திருக்கிறார் எஸ்.பி.ஜனநாதன். அதேபோல் வீரமங்கை வேலுநாச்சியாரின் படைத்தளபதியான குயிலி என்பவரின் பெயரை, தனது படத்தில் நடிக்கும் கார்த்திகாவிற்கு சூட்டியிருக்கிறார். விஜய் சேதுபதியின் கேரக்டர் பெயர் எமலிங்கம்.
இந்திய கல்வித்துறை திட்டத்தையும், தண்டனைச் சட்டத்தையும் வடிவமைத்த மெக்காலேவின் பெயரை ஷாமுக்கு சூட்டியிருக்கிறார். இப்படியாக படத்தில் வரும் ஒவ்வொரு முக்கிய கதாபாத்திரங்களுக்கும் சரித்திர பின்னணி உண்டு. புறம்போக்கு என்கிற பொதுவுடைமை படத்தைத் தயாரித்து வரும் யுடிவி மோஷன் பிக்சர்ஸ் இப்படத்தை டிசம்பர் மாதம் வெளியிட திட்டமிட்டிருந்தது. லிங்கா படம் டிசம்பரில் வெளியாவதால் இந்தப் படத்தை ஜனவரிக்கு தள்ளி வைத்துவிட்டனர்
No comments:
Post a Comment