துள்ளுவதோ இளமை படத்தில் அறிமுகமானவர்
ஷெரின். அதன் பிறகு ஸ்டூடண்ட் நம்பர் ஒன், விசில், கோவில்பட்டி வீரலட்சுமி, உற்சாகம், பூவா தலையா
படங்களில் நடித்தார். அதன் பிறகு இங்கு வாய்ப்புகள் இல்லாமல் கன்னட படங்களில்
நடிக்க ஆரம்பித்தார். தற்போது நண்பேன்டா படத்தின் மூலம் மீண்டும் வருகிறார்.
நண்பேன்டா படத்தில் சந்தானத்தின் ஜோடியாக நடிக்கிறார். அல்ட்ரா மார்டன் பெண்ணான
ஷெரினை ஓட்டல் நடத்தும் சந்தானம் காதலிப்பார். அந்த காதல் தோற்றுவிடும். அதை பல
ஐடியாக்கள் பண்ணி உதயநிதி சேர்த்து வைக்க முயற்சிக்க அந்த முயற்சிகள் மொக்கையாகி திரும்புது
மாதிரியான கதை. சந்தானத்துக்கும்,
ஷெரினுக்கும் சிறிய டூயட் பாடல் கூட
இருக்கிறது.
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்
படத்துக்கு பிறகு வாலிபராஜாவில் ஹீரோவாக நடித்து வரும் சந்தானம். உதயநிதிக்காக
இந்தப் படத்தில் காமெடியனாக நடிக்கிறார். இதற்காக 40 நாள் கால்ஷீட் கொடுத்திருக்கிறார்.
ஓகே ஓகே ராஜேஷின் உதவியாளர் ஜெகதீஷ் படத்தை இயக்குகிறார்.
No comments:
Post a Comment