நான் கடவுள், அங்காடித்தெரு, நீர்ப்பறவை, கடல்
உள்பட பல படங்களுக்கு வசனம் எழுதியவர் எழுத்தாளர் ஜெயமோகன். இப்போதும் சில
படங்களுக்கு வசனம் எழுதிக்கொண்டிருக்கிறார். இப்படி மணிரத்னம், பாலா
போன்ற முன்னணி இயக்குனர்களின் படங்களுக்கு வசனம் எழுதிய ஜெயமோகனுககு அடுத்தபடியாக
ஷங்கரின் படத்திற்கும் எழுதும் வாய்ப்பு கதவை தட்டியுள்ளதாம்.
தற்போது இந்திய அளவில் அதிக பட்ஜெட்டாக 150 கோடியில் தயாராகியுள்ள ஐ படத்தை இயக்கியுள்ள ஷங்கர், அடுத்து தான் ரஜினியைக்கொண்டு ஏற்கனவே இயக்கிய எந்திரன் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கும் முடிவில் இருக்கிறார். தீபாவளிக்கு ஐ படத்தை வெளியிட வேண்டும் என்பதால் தற்போது அப்படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் அவர் தீவிரமடைந்தபோதும், இதுகுறித்து ஏற்கனவே ரஜினியிடம் பேசி ஒப்புதல் பெற்று விட்டதாக கூறப்படுகிறது.
ஆனால், இன்னும் அவர் எந்திரன்-2 பற்றி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. அதேசமயம், இதற்கு முன்பு ஷங்கர் இயக்கிய பல படங்களுக்கு வசனம் எழுதியதோடு கதையிலும் அவருக்கு உறுதுணையாக இருந்து வந்தவர் மறைந்த எழுத்தாளர் சுஜாதா. அவரது மறைவுக்கு பிறகு எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் உள்பட சிலருடன் இணைந்து பணியாற்றிய ஷங்கர், எந்திரன்-2வுக்கு ஜெயமோகனுடன் பணியாற்றப் போகிறாராம். இதுகுறித்து பேச்சுவார்த்தைகள் நடந்து முடிந்து விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

No comments:
Post a Comment