மீண்டும் வசன நடையில் ஒரு பாடல் - தல படத்தில்










சரண் இயக்கத்தில் அஜீத் நடித்த படம் அமர்க்களம். ஷாலினி கதாநாயகியாக நடித்திருந்தார். அந்த படத்தில் நடித்தபோதுதான் அஜீத்-
ஷாலினிக்கிடையே காதல் உருவானது. அப்படத்தில் நடித்து முடித்ததும் திருமணம் செய்து கொண்டனர். மேலும், இப்படத்தில் முதன்முதலாக சொந்த குரலில் பாட ரொம்ப நாளா ஆசை -என்றொரு பாடலை சொந்த குரலிலேயே பாடி நடித்திருந்தார் ஷாலினி.

மேலும், சரண் கூட்டணியில் காதல் மன்னன் படத்தையடுத்து, அமர்க்களம் படத்திற்கும் அதிரடியான பாடல்களை கொடுத்திருந்தார் இசையமைப்பாளர் பரத்வாஜ். அதில் வைரமுத்து எழுதிய, சத்தம் இல்லாத தனிமை கேட்டேன். யுத்தம் இல்லாத உலகம் கேட்டேன் -என்றொரு வசன வடிவிலான ஒரு அதிரடி பாடல் இடம்பெற்றிருந்தது. அதில் அஜீத், ஆவேசமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.


அதேபோல் இப்போது கெளதம்மேனன் இயக்கத்தில் அஜீத் நடித்து வரும் 55வது படத்திலும் வசன நடையில் ஒரு பாடல் இடம்பெற்றுள்ளதாம். ஆனால், அமர்க்களம் பாடல் போன்று உருவாக்க நினைத்த அந்த பாடலை, ஹாரிஸ் ஜெயராஜ் தனது பாணியில் கமல் நடித்த வேட்டையாடு விளையாடு படத்தில் இடம்பெற்ற கற்க கற்க பாடல் போன்று கம்போஸ் செய்திருக்கிறாராம். இந்த பாடலின் இடையிடையே அதிரடியான மாஸ் வசனங்களும் இணைக்கப்பட்டுள்ளதாம். அதனால் அஜீத் ரசிகர்களுக்கு இந்த பாடல் பெரிய விருந்தாக அமையும் என்கிறார்கள்.

No comments:

Post a Comment