அரண்மனை ஜூன் வெளியாகிறது

விஷன் ஐ மீடியாஸ் நிறுவனம் சார்பில் டி.தினேஷ் கார்த்திக் தயாரிக்கும் படம் அரண்மனை. இப்படத்தை சுந்தர் சி. இயக்கி வருகிறார். இப்படத்தில் சுந்தர்.சி, வினய், சந்தானம், ஹன்சிகா மோத்வானி, ஆண்ட்ரியா, லட்சுமிராய் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். சரவணன், கோவைசரளா, மனோபாலா, காதல் தண்டபாணி, கோட்டா சீனிவாசராவ், சித்ரா லட்சுமணன், நிதின் சத்யா மற்றும் 21 நட்சத்திர பட்டாளங்களும் நடித்துள்ளனர். பரத்வாஜ் இசையமைத்துள்ளார். யு.கே.செந்தில்குமார் ஒளிப்பதிவை செய்துள்ளார்.





படத்தைப் பற்றி சுந்தர்.சி கூறும்போது, “இதுவரை நகைச்சுவைப் படமாக எடுத்துவந்த நான் முதன்முதலாக திகில் கலந்த காமெடி படமாக இப்படத்தை எடுத்திருக்கிறேன். மன்னர் காலத்து சொத்தான பெரிய அரண்மனையில் நடக்கும் திகிலான சம்பவங்களை மையப்படுத்தி உருவாக்கியிருக்கிறேன். இதில் வினய் கதாநாயகனாக நடித்துள்ளார். சந்தானம் வேலைக்காரன் கதாபாத்திரத்தில் வருகிறார். இவருக்கு ஜோடியாக லட்சுமிராய் நடித்திருக்கிறார். மேலும் ஹன்சிகா இப்படத்தில் புது தோற்றத்தில் வருகிறார். நான் இப்படத்தில் ஆண்ட்ரியாவிற்கு அண்ணன் கதாபாத்திரத்தில் நடிக்கிறேன்என்று கூறினார்.
திகில் படத்தை இயக்க ஏன் முடிவு செய்தீர்கள்? என்று நிருபர்கள் கேட்டதற்கு, “தற்போது பெண்கள் திகில் படங்களை ரசிக்கிறார்கள்என்றார் சுந்தர் சி.
திகில் படங்கள் எல்லாம் பங்களாவில் எடுக்கிறீர்களே என்? என்று கேட்டதற்கு, “பெரும்பாலான திகில் படங்கள் எல்லாம் பங்களாவை சுற்றித்தான் அமைந்திருக்கும். காஞ்சனா, சந்திரமுகி போன்ற படங்கள் வெற்றி பெற்றன. அந்த வரிசையில் இப்படமும் இருக்கும்என்றார்.
ரீமேக் செய்வீர்களா? என்று கேட்டதற்கு, நான் எடுத்த கதையை எனக்கு மறுபடியும் எடுக்க பிடிக்காது என்றார் சுந்தர் சி.
சந்தானத்தை ஏன் நடிக்க வைத்தீர்கள் என்று கேட்டபோது, ‘சந்தானத்தை வைத்து படம் பண்ணும்போது சௌகரியமாக இருக்கிறது. குறிப்பாக இதுவரை என் படத்தில் நடித்த வரைக்கும் இவ்வளவு சம்பளம் வேணும் என்றும் கால்ஷீட் பற்றியும் சந்தானம் பேசியது கிடையாது. அது எனக்கு மிகவும் பிடித்தது. அடுத்ததாக எடுக்க போகும் படத்திலும் சந்தானத்தை நடிக்க வைக்க பேசி வருகிறேன்என்றார்.

தற்போது அரண்மனை இறுதிக்கட்ட வேலைகள் நடந்து வருகின்றன. இப்படத்தின் பாடல்கள் விரைவில் வெளியிடப்படவுள்ளது. ஜூன் மாதம் இப்படம் வெளியாகிறது என்றும் சுந்தர் சி. தெரிவித்தார்.