இந்திக்கு படு கவர்ச்சி - தம்மன்னா

தன்னுடன் சினிமாவில் அறிமுகமான இலியானா இந்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து விட்டார். தானும் எப்படியாவது இந்தியில் இடம்பிடித்து விடவேண்டும் என்று கங்கனம் கட்டிக் கொண்டு வாய்ப்பு தேடியதில் ஹிம்மத்வாலாவில் நடித்தார். படம் எதிர்பார்த்த அளவு போகாததால் வெறுத்துப்போன தமன்னா மீண்டும் தெலுங்கு, தமிழில் சுற்றி வந்தார். ஆனாலும் இந்தி ஆசை விடவில்லை.



பொதுவாக இந்திப் படத்தில் உரிச்ச கோழியாக நடித்தால்தான் ஹீரோக்களுக்கும் பிடிக்கும், ரசிகர்களுக்கும் பிடிக்கும் என்பதை தாமதமாக தெரிந்து கொண்டார் போலும் தற்போது நடித்து வரும் ஹம்சகல்ஸ் படத்தில் படு கவர்ச்சியாக நடித்து வருகிறார். படத்தில் ஒரு நீச்சல் உடை காட்சியும், சயிப் அலிகானுடன் ஒரு முத்தக் காட்சியும் இருப்பதாக மும்பை வட்டார தகவல்கள் தெரிவிக்கிறது.
இந்திக்கு தக்கபடி தன் பெயரை தமன்னா பாட்டியா என்றும் வைத்துக் கொண்டார் இந்தப் படத்தில் பிபாச பாசு, ஈஷா குப்தா இருவருக்கும் போட்டியாக கவர்ச்சி களத்தில் குதித்திருக்கிறார் தமன்னா, இந்திக்கு படு கவர்ச்சி, தெலுங்கிற்கு கவர்ச்சி, தமிழுக்கு குடும்ப குத்துவிளக்கு இதுதான் தமன்னாவின் லேட்டஸ்ட் பாலிசி.