சரும பொலிவு பெற என்ன செய்யலாம்

பொதுவாக, சருமத்தின் நிறம் குறைவதற்கு மன இறுக்கமும் ஒரு காரணம். மனதைத் தூய்மைப்படுத்தி ஒரு நிலைப்படுத்துவதன் மூலம், நம்முடைய சருமத்துக்கு நல்ல நிறம், பொலிவு இளமைஎன அனைத்தும் கொடுப்பதில் பூக்களுக்கும் பங்கு எண்டு. இனி, பூக்களைக் கொண்டு தயாரிக்கும் தைலத்துக்குத் தேவையானவை பற்றிப் பார்க்கலாம்.

ரோஜாப் பூ – 1 கப்
சம்பங்கி பூ – 1 கப்
செண்பகப் பூ – 1 கப்
மரிக்கொழுந்து – 1 கப்
தவனம் – 1 கப்
செய்முறை:-
அன்று மலர்ந்த பூக்களை நன்கு சுத்தம் செய்து சிறு சிறு துண்டுகளாக்கி, ஒரு மெல்லிய ஈரமான துணியால் கட்டி வைக்கவும். ஈரப்பதம் நீங்குவதற்கு உலர்ந்த துணியால் உலர்த்தவும். 300 மில்லி தேங்காய் எண்ணெயை நன்கு காய்ச்சி ஆறவைத்து, ஒரு பாட்டிலில் ஊற்றிக் கொள்ள வேண்டும்.
அதில், நன்கு துடைத்த பூக்கள் அனைத்தையும் போட்டு வெயிலில் வைத்து எடுக்கவும். 10 நாட்கள் இவ்வாறு வைத்து எடுத்து, அதை அப்படியே ஒரு பாத்திரத்தில் ஊற்றிக் காய்ச்சவும். சூடு ஆறிய பின் நன்கு வடிகட்டி பாட்டிலில் ஊற்றவும். இந்தத் தைலத்தை தினமும் முகம், கழுத்து போன்ற இடங்களில் தடவிக் கொண்டு குளிப்பதை பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்.
ரோஜாப்பூ, நிறத்தைக் கொடுக்கும். சம்பங்கிப் பூ, மன அமைதியைக் கொடுக்கும். செண்பகப் பூ, மனதின் துயரத்தை நீக்கி நல்லதோர் உணர்வை ஏற்படுத்தும். மரிக்கொழுந்து, தவனம் இவை இரண்டும் சருமத்துக்கு நல்ல ஸ்திரத்தன்மையைக் கொடுப்பதோடு, நல்ல சுகமானதொரு மணத்தையும் கொடுக்கிறன்.
பூக்கள், பெண்களின் தலையை அலங்கரிப்பதோடு ஒவ்வொரு பூவின் தனித்தன்மையும் மனித மனதுக்காக உற்சாகம், நிம்மதி, நல்ல மணம், நிறம் இவற்றைக் கொடுத்து, உடலின் சருமம் நல்ல பொலிவுடன் விளங்கவும் உதவுகிறன்றன.