நடிகை
காஜல் அகர்வாலின் தங்கை நிஷா அகர்வால். தெலுங்கில் நடித்துக் கொண்டிருந்தவர், தமிழில், ‘இஷ்டம்’ என்ற படத்தில் அறிமுகமானார். அதன் பிறகு சரியான வாய்ப்புகள்
இல்லாததால் மீண்டும் சில தெலுங்கு படங்களில் நடித்தார்.
அங்கும் சரியான
வாய்ப்புகள் அமையாததால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டு
செட்டிலாகிவிட்டார். திருமணத்திற்கு பிறகு நடிக்க மாட்டார் என்று கருதப்பட்டது.
ஆனால்
தற்போது மலையாளத்தில் பையா பையா என்ற படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார்.
(அதென்னமோ தெரியவில்லை. மலையாள ஆடியன்சுக்கு கல்யாணமான நடிகைங்களைத்தான் ரொம்ப
புடிக்குது). குஞ்சாக்கோ போபனுக்கு ஜோடி. ஜானி ஆண்டனி இயக்குகிறார்.
குடும்ப
செண்டிமெண்டுகள் நிறைந்த பேமிலி கதையாம். ஒரே மாதத்தில் படத்தை முடிக்க
திட்டமிட்டிருக்கிறார்கள். நிஷா அவர்வால் நடிக்கும் முதல் மலையாள படம் இது.
S