கூகுளில் துல்லியமான தேடுவது எப்படி?


இணையத்தில், சிறப்பான வழிகளில், துல்லியமாக நம் தேடலை அமைத்துத் தகவல்களைப் பெறுவது என்பது ஒரு தனித் திறமையே. இக்காலத்தில், நமக்கு என்ன தகவல்கள் தேவை என்றாலும், கூகுள் தளத்தினையே நாம் சார்ந்திருக்கிறோம். பல நேரங்களில், நம் தேடலுக்கான முடிவுகள் நமக்கு ஏமாற்றத்தினையே தரும். ஏனென்றால், பொதுவான தேடல்களாக நாம் அமைத்திருப் போம்.




கூகுள் தேடல் தளத்தினைப் பொறுத்தவரை, நாம் சரியாக நம் தேடல் கேள்விகளை அமைத்தால், நமக்கு தகவல்களும் நாம் தேடிய வகையில் கிடைக்கும். எனவே, நமக்குத் தேவையானதைச் சரியாகப் பெற, அதில் தேடல்களையும் நாம் சரியாக அமைக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். முன்பு இது குறித்த கட்டுரை ஒன்று வெளியானது. தற்போது இன்னும் சில குறிப்புகளை இங்கு காணலாம்.
பொதுவாக, நிறுத்தல் மற்றும் பிற குறிகளுக்கு நாம் அவ்வளவாக முக்கியத்துவம் அளிப்பதில்லை. ஆனால், கூகுள் அளிக்கிறது. கூகுள் புரிந்து கொள்ளும் குறியீடுகளும், அவற்றின் தன்மையும் இங்கே தரப்படுகிறது.
1. + கூகுள் + பக்கம் அல்லது இரத்த வகை (AB+) குறித்த தேடலாக கூகுள் எடுத்துக் கொள்ளும்.
2. @ சமூக நிலை குறித்த டேக் (Social tags) ஆகப் பொருள் உண்டு.
3. & சார்ந்த கருத்துக்களை கூகுள் தேடும்
4. % சதவீத அளவில் மதிப்பினைத் தர கூகுள் முயற்சிக்கும்.
5. $ இது விலையைக் குறிக்கும்.
6. # இதுவும் சார்ந்த தலைப்புகளில் தகவலைத் தேடித் தரும். 
இன்னும் சில தேடல் குறிப்புகளைத் தருகிறேன்.
நீங்கள் தேடும் தகவல்கள், உங்களுக்கு ஒரு குறிப்பிட்ட தளத்திலிருந்து மட்டுமே எடுத்துத் தரப்பட வேண்டும் எனக் கருதினால், அதனை வரையறை செய்து கூகுள் தேடல் கட்டத்தில் அமைக்கலாம். இதற்கு தேடல் சொற்களுடன் ”site:” என்ற சொல்லை (மேற்கோள் குறிகள் இல்லாமல்) அமைக்க வேண்டும். எடுத்துக்காட்டாக, அன்னை தெரசா குறித்து, விக்கிபீடியா தளத்தில் உள்ள தகவல்கள் மட்டும் வேண்டும் என்றால், motherteresa site:wikipedia.com எனக் கொடுக்க வேண்டும். கோலன் குறியீட்டினை அடுத்து ஸ்பேஸ் விடக் கூடாது. இதற்கு மாறாக, குறிப்பிட்ட ஒரு தளம் தவிர மற்ற தளங்களிலிருந்து தகவல் வேண்டுமாயின் mother teresa site:wikipedia.com எனத் தர வேண்டும். இப்போது விக்கி பீடியா இல்லாமல், மற்ற அனைத்து தளங்களிலிருந்தும் தகவல்கள் தரப்படும்.
ஏற்கனவே கம்ப்யூட்டர் மலரில் தந்த சில தகவல்களையும் தருகிறேன். கூகுள் தேடல் தளத்தினை கால்குலேட்டராகவும், அளவின் அலகுகளை மாற்றும் ஒரு சாதனமாகவும் மற்றும் ஒரு அகராதியாகவும் பயன்படுத் தலாம். எந்தக் கணக்கினையும், அது அறிவியல் அடிப்படையிலான சயிண்டிபிக் கால்கு லேஷனாக (equation) இருந்தாலும் இதில் அமைத்து விடை பெறலாம். சாதாரண கூட்டல், கழித்தல் கணக்குகளையும் மேற்கொள்ளலாம். அதே போல அலகு அளவினை (length, speed, and mass) வேறு ஒரு வகைக்கு மாற்றி தருவதற்கும் இதனைப் பயன் படுத்தலாம்.
மேலே தரப்பட்டுள்ள வழிகளால், நம் தேடல்களை ஒரு குறிப்பிட்ட வரையறைக்குள் அமைத்து, நேரம் வீணாகமல் துல்லியமான முடிவுகளைப் பெற கூகுள் தளத்தினை நாம் பயன்படுத்த முடிகிறது.
அதே போல தகவல்களை நாம் பெறுகையில், எப்போதும் முதல் சில தளங்கள் தரும் தகவல்களை மட்டுமே காண்பதனை நாம் பழக்கத்தில் கொண்டுள்ளோம். அவ்வாறின்றி, சில பக்கங்கள் தாண்டிச் சென்று, அதில் காட்டப்பட்டுள்ள தளங்கள் குறித்தும் அறிந்து, தேடிப்பெறலாம்.