டாஸ்
வென்ற இந்திய அணி கேப்டன் டோனி இலங்கை அணியை பேட் செய்ய அழைத்தார். தொடக்க
ஆட்டக்காரர்களாக பெரேரா, தில்சான்
களமிறங்கினர்.
பெரேரா அதிரடியாக ஆடி 21 ரன்கள் எடுத்து வருண்
ஆரோன் வீசிய பந்தில் முகமது சமியிடம் அற்புதமாக பிடிபட்டார். தொடர்ந்து களமிறங்கிய
அனைத்து வீரர்களும் இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறிய வண்ணம்
இருந்தனர்.
எனவே விக்கெட்டுகள் சீரான இடைவளியில் விழுந்தன. 20 ஓவர்களின் முடிவில் இலங்கை அணி 6 விக்கெட்டுகளை இழந்து 153 ரன்கள் எடுத்தது. இலங்கை அணி தரப்பில் ஜெயவர்தனே 30 ரன்களும், சண்டிமால் 29 ரன்களும் எடுத்தனர். அஸ்வின் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
154 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் அஸ்திவாரம் ஆட்டம் கண்டு போனது. இந்திய அணி தொடக்க ஆட்டக்காரர்களான ரோகித் சர்மா, ஷிகார் தவான் அடுத்தடுத்து அவுட் ஆகி நடையைக் கட்டினர்.
அடுத்து களமிறங்கிய சுரேஷ் ரெய்னா, யுவராஜ் சிங் ஜோடி இந்திய அணியை சரிவில் இருந்து மீட்க போராடியது. ஆனால் இவர்களது கூட்டணி நீடிக்கவில்லை. இவர்களது ஜோடி பிரிந்த நிலையில் இந்திய அணி வரிசையாக அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 148 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.
4 விக்கெட்டுகளை கைப்பற்றிய மலிங்கா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.