புதிய உத்தம வில்லன் ட்ரைலர்உத்தமவில்லன் படத்துக்காக அதி நவீன ட்ரைலரை உருவாக்கியுள்ளார் நடிகர் கமல் ஹாஸன். இந்த ட்ரைலர் விரைவில் வெளியாகும் என்று அவர் அறிவித்துள்ளார்.
கமல்ஹாஸன், பூஜா குமார், ஆன்ட்ரியா, பார்வதி, கே பாலச்சந்தர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள படம் உத்தம வில்லன்.

இந்தப் படத்தின் தொழில் நுட்ப பணிகள் அமெரிக்காவில் நடந்து வருகின்றன. இதற்காக கமல் அங்கு கடந்த சில வாரங்கள் முகாமிட்டிருந்தார்.
விரைவில் படத்தின் ட்ரைலர் வெளியாகவிருக்கிறது. இதுகுறித்து கமல் ஹாஸன் கூறுகையில், “உத்தம வில்லன் படத்தின் இசை சம்பந்தப்பட்ட பணிகள் அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள பாரமவுண்ட் ஸ்டுடியோவில் நடந்து முடிந்துள்ளது. படத்தின் டிரெய்லரும் தயாராகி விட்டது. விரைவில் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெறும்,” என்றார்.


No comments:

Post a Comment